ஃபேமஸ் ஆக இப்படிகூடவா செய்வாங்க? புலியும் அவனும்.. வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் உள்ள ஹாசன் என்பவர் விலங்குகளுடன் பல வீடியோக்களை பகிர்பவர். அவரது சமீபத்திய வீடியோவில், ஒரு மூடிய அறையில் ஒரு பெரிய புலியுடன் மிக நெருக்கமாக அவர் இருப்பதைக் காண முடிகின்றது. இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புலி ஆக்ரோஷமாகத் தோன்றினாலும், அதிர்ஷ்டவசமாக, கடுமையான அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Trending News