Self Confidence: கடுமையாக உழைக்கும் 75 வயது பாட்டியின் வீடியோ வைரல்

குஜராத்தின் சேர்ந்த பாட்டியின் கதை நெஞ்சை நெகிழச் செய்தாலும், அவரது திடமான தன்னம்பிக்கை பலருக்கு ஊக்கம் கொடுக்கிறது. இதயத்தைத் தொடும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2021, 04:54 PM IST
  • தன்னம்பிக்கையின் மறுபெயராக திகழும் 75 வயது மூதாட்டி
  • தினசரி காலை முதல் மாலை வரை கைவண்டியில் வேலை
  • நானே முதலாளி, நானே தொழிலாளி என்று சொல்லும் தைரியமான பாட்டி
Self Confidence: கடுமையாக உழைக்கும் 75 வயது பாட்டியின் வீடியோ வைரல் title=

75 வயது பாட்டியின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

தனது கணவர் இறந்த போதிலும், கடுமையாக உழைத்து சொந்தக்காலில் நிற்கும் மூதாட்டியின் தன்னம்பிக்கை அசர வைக்கிறது.

குஜராத்தின் சேர்ந்த பாட்டியின் கதை நெஞ்சை நெகிழச் செய்தாலும், அவரது திடமான தன்னம்பிக்கை பலருக்கு ஊக்கம் கொடுக்கிறது. இதயத்தைத் தொடும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மனசோர்வு, மன அழுத்தம், துக்கம், சோகம் என எந்தவொரு விஷயத்தால் கவலைப்பட்டாலும், 75 வயதான பாட்டியின் வீடியோவைப் பார்த்தால் உற்சாகமும், உத்வேகமும் அதிகரிக்கும். 

வைரலாகும் இந்த வீடியோவில் பாட்டி சொல்வது நிதர்சனமான உண்மை. அவருடைய தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பாராட்டலாம்,  

குஜராத்தைச் சேர்ந்த இந்த பாட்டியின் தைரியம் இலக்கை அடைய திட்டமிடுபவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் குடியேறிய அந்த பாட்டியின் குடும்பம் கிடைத்த வேலையை செய்து வாழ்ந்து அந்திருக்கிறது. ஆனால் ஒரு வருடத்தில் கணவருக்கு வேலையில்லாமல் போனபோது அவர்களிடம் இருந்தது 60 ரூபாய் மட்டுமே!

Also Read | Olympic தங்க மகன் நீரஜ் சோப்ராவின் ஸ்கூபா டைவிங் வீடியோ வைரல்

ஆனால் தைரியத்தை இழக்காத தம்பதிகள் இருவரும் சேர்ந்து திண்பண்டங்கள் செய்து விற்பனை செய்து சம்பாதித்தனர். தொடக்கத்தில் இருவரும் சேர்ந்து தினசரி 50 ரூபாய் தான் சம்பாதிக்க முடியாது. 

ஆனால் படிப்படியாக அவர்களது உணவும், கைப்பக்குவமும் ப்டித்துப்போகவே வியாபாரம் சூடுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அந்த தம்பதிகள் இருவரும் ஃபாஃப்டா என்ற திண்பண்டத்தை தயாரித்து விற்பனை செய்துவந்தனர். 

Also Read | கூரை மீது ஏறி அமர்ந்து கீழே வர மறுத்த மணப்பெண், காரணம் என்ன?

வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். கைவண்டியில் செய்யும் வியாபாரத்தை மூடிவிடச் சொல்லி பிள்ளைகள் சொன்னாலும், தொடர்ந்து வேலை செய்வதையே விரும்பிய பாட்டி கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

75 வயதானாலும், தினரி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கைவண்டியில் சமைத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறார் மூதாட்டி. 
நான் செய்த உணவை சாப்பிட மக்கள் கார்களில் வருகிறார்கள், அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை, என்னால் முடியும்போது நான் ஏன் வேலை செய்யக்கூடாது என்று பாட்டி எழுப்பும் கேள்வி, சோம்பேறிகளுக்கு சாட்டையடியாக இருக்கலாம்.

நானே முதலாளி, நானே தொழிலாளி, 75 வயதிலும் நான் சம்பாதிக்கிறேன் என்று பாட்டி திருப்திப்படுகிறார்.

இந்த காணொளி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் officialhumansofbombay என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ள இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News