Viral Video: பெரும்பாலான பாம்புகள் முட்டையிடும். முட்டையிட்டு சிறிது நேரம் கழித்து அந்த முட்டைகளில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளியே வரும். ஆனால் இயற்கையில் நம்மை ஆச்சரியப்படும் வகையில் சில விஷயங்கள் உள்ளன. பெண் பாம்பு ஒன்று குட்டி பாம்பை பெற்றெடுக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
பச்சை நிற பாம்பு ஒன்று பழுப்பு நிறத்தில் மற்றொரு பரிணாம வளர்ச்சியடைந்த பாம்பை பெற்றெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது.
ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!
பிறந்த பாம்பு தானே வெளியே வரும் வகையில், மரக்கிளையில் பெண் பாம்பு, சுற்றிக் கொண்டு அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. அதன் பிறகு ஒரு குட்டி பாம்பு பிறப்பதை வீடியோவில் காணலாம்.
இது தென் அமெரிக்காவின் எமரால்டு ட்ரீ போவா பாம்பு ( Emerald tree boas) என்று கூறப்படுகிறது இந்த வீடியோவைப் பற்றி, சயின்ஸ் கேர்ள் என்ற பயனர், தென் அமெரிக்காவில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் உயரமான மரங்களில் காணப்படும் எமரால்டு ட்ரீ போவா பாம்பு என்று முட்டை இடாது, குட்டி தான் போடும் என கூறியுள்ளனர். குட்டி போட்ட பிறகு, தாய் பாம்புடன் தொப்பூள் கொடி போன்ற எந்த தொடர்பும் இல்லை எனவும், இந்த குட்டி பாம்பு கருவில் உருவாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
these Emerald tree boas live high in the foliage of trees in the rainforests of
South AmericaThey are ovoviviparous and give birth to live young like this
there is no placental connection to the mother –embryos develop in egg-like sacs internally pic.twitter.com/MyGNFABkwY
— Science girl (@gunsnrosesgirl3) December 27, 2021
பெரும்பாலான பாம்புகள் கருமுட்டை உடையவை; அவை முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில இனங்கள், குட்டிகளை ஈனுகின்றன. இவை முட்டைகள் ஈடுபடுவதில்லை. மூன்றாவது வகை பாம்புகள், குட்டிகள் வளரும் உடல் பாகத்தில், ஓடு இல்லாத முட்டைகளை உருவாக்குகின்றன.
ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR