Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!

தற்போது வைரலாகும் வீடியோவில், பாம்பு தன்னை தானே விழுங்குவதை பார்த்து, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 23, 2021, 03:27 PM IST
  • பாம்பு தனது வாலை பகுதியை வாயில் நுழைத்து தன்னை தானே சாப்பிடுவதை காணலாம்.
  • இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • பாம்புகளுக்கு சானிடைஸர் சுவை பிடிக்காது
Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!! title=

இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை,  சில சமயம் சிந்திக்க வைக்கின்றன,  சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

அந்த வகையில் தற்போது வைரலாகும் வீடியோவில், பாம்பு தன்னை தானே விழுங்குவதை பார்த்து, ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாவதை தவிர்க்க இயலவில்லை. யூடியூப்பில் (Youtube) பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ இதுவரை 13 மில்லியன் வ்யூஸ்களை பெற்றுள்ளது. புள்ளிகள் கொண்ட அரசப் பாம்பு ஒன்றை தன்னைத்தானே சாப்பிட முயன்று, அதன் முழு உடலையும் கிட்டத் தட்ட விழுங்கிய நிலையில் அதன் உரிமையாளர் ராப் கிளார்க் வெனிடாக்ஸ் என்பவர், ஒரு தனது சாதுர்யத்தால் பாம்பை காப்பாற்றினார்

வீடியோவில், பாம்பு தனது வாலை பகுதியை வாயில் நுழைத்து தன்னை தானே சாப்பிடுவதையும்  அதன் உடலின் பெரும்பகுதி வாய்க்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம். இருப்பினும், பாம்பின் உரிமையாளர், பாம்புகளுக்கு சானிடைஸர் சுவை பிடிக்காது என்பதால், அதன்  தலையில் சானிடைஸரை போட முயற்சிக்கிறார். அந்த நபர் பாம்பின் மீது சானிடைசரைப் போட்ட உடன், அது விழுங்கிய அதன் முழு உடலையும் வெளியே துப்புவதைக் காண முடிந்தது.

பாம்பின் தலைக்கு பதிலாக சானிடைசரை அதன் கண்களில் வைத்த உடன் அதற்கு எரிச்சல் ஏற்பட்டாலும், பாம்புகளின் கண்களைப் பாதுகாக்கும் செதில்கள், கண்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றியுள்ளது," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும், பாம்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சம்பவத்திற்குப் பிறகு உணவு உண்டதாகவும் தெரிவித்தார். “இந்த சம்பவத்தில் இருந்து இந்த பாம்பு விரைவில் குணமடைந்து தற்போது நன்றாக உள்ளது. நான் அவரைக் கழுவினேன், அவர் விரைவில் உணவை சாப்பிட்டார், ”என்று ராப் கூறினார்.

ALSO READ | காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ

பாம்பு ஏன் தன்னைத்தானே சாப்பிட்டது என்பது குறித்து அந்த நபர் விளக்கமளிக்கையில், “அரச பாம்புகள் மற்ற பாம்புகளை உண்பதால், அவ்வப்போது தன்னை தானே விழுங்கும் மன நிலை அதற்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம், பட்டினி அல்லது சூடான தட்பநிலை போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். எனினும், இந்த பாம்பு சரியான வெப்பநிலை, ஆரோக்கியமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றுடன் வாழ்வதால் இதற்கான சாத்திய கூறு இல்லை. 

பாம்புகளிடம் இது மிகவும் அரிதான மற்றும் அசாதாரணமான நடத்தை என்றும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். “என்னிடம் இந்தப் பாம்பு இருந்த பல வருடங்களாக உள்ளது. இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை” என்று அதன உரிமையாளர் ராப் மேலும் கூறினார்.

ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News