இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்

மரக்கிளை யாருக்கு சொந்தம் என்று போட்டாபோட்டி போடும் பாம்புகள் இடியாப்ப சிக்கலைப் போல சிக்கிக் கொள்ளும் திகிலூட்டும் வீடியோ இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 08:24 PM IST
  • சண்டை மும்முரத்தில் பாம்புகள்
  • இடியாப்பமாய் சிக்கித் தவிக்கும் பாம்புகள்
  • அதிர வைக்கும் பாம்பு சண்டை
இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர் title=

வைரல் வீடியோ: வேடிக்கையை விரும்பும் மனிதர்களுக்கான உலகம் இணையம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் பதிவேற்றப்படுகின்றன, அவை பார்க்கப்படுவதும் பகிரப்பட்டு வைரலாகின்றன.

அதில் அனைத்தும் வைரலாகாவிட்டாலும், வித்தியாசமானவை சக்கைபோடு போடுகின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்தினால், சில சமயம் அச்சப்பட வைக்கின்றன.

சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் நமக்குக் பாடத்தையும் கற்றுக் கொடுக்கின்றன. மகிழ்ச்சி, வருத்தம், சிரிப்பு, அதிர்ச்சி, திகில் என பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன இணையத்தில் உலாவரும் வீடியோக்கள்.

சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும் படிக்க | பாம்பின் மரமேறும் சாகச வீடியோ: இப்படித்தான் மரம் ஏறனும்

ராஜநாகம் மற்றும் இந்திய நாகப்பாம்புகள் உலகில் உள்ள மிகவும் விஷமுள்ள பாம்புகள் என்று அறியப்படுகின்றன. இவை ஒரு மனிதனைக் கடித்தால், கடித்த 20 நிமிடங்களுக்குள் உயிர் பிரிந்துவிடும்.

இப்படி ஒற்றை நாகம் ஒன்றே பலரை பதம் பார்த்துவிடும் என்றால், அவை கூட்டணி சேர்ந்தால் என்ன ஆகும். படையையே நடுங்க வைக்கும் பாம்புகள், சண்டையிட்டுக் கொண்டால் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை விட சண்டையின் வீரியமும், நெளிவு சுளிவும் பலராலும் பார்க்கப்படுகிறது. 

மரக்கிளை யாருக்கு சொந்தம் என்று போட்டாபோட்டி போடும் பாம்புகள் இடியாப்ப சிக்கலைப் போல சிக்கிக் கொள்ளும் திகிலூட்டும் வீடியோ இது...

இந்த பாம்புகளின் வைரல் வீடியோ வித்தியாசமான சண்டை வீடியோவாக இருப்பதால் சமூக ஊடகங்களில் பரவலாக பார்க்கப்படுகிறது.

காட்டில் உள்ள மெல்லிய மரக்கிளையில் பெரிய நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று சிக்கியிருப்பதை வீடியோவில் பார்க்கலாம். 

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் ‘snake._.world’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை ஆயிரக்காணவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். 18k பார்வைகளையும் 1,400 லைக்குகளையும் பெற்று சூப்பர் வீடியோவாக பதிவாகியுள்ளது. 

சிறிய கிளையில் தங்குவதற்காக இவை போட்டி போடுவதாக தெரிகிறது. ஒரு பாம்பு ஏறுவதைப் பார்த்து மற்றொன்று ஏறியதா இல்லை, இந்த மரத்தில் அப்படி ஏதாவது சிறப்பு இருக்கிறதா?

இது அந்தப் பாம்புகளைத்தான் கேட்க வேண்டும். இந்த உக்ரமான சண்டையின்போது, பாம்பு ஒன்று கிளையிலிருந்து கீழே விழுவதை பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | மோகத்துடன் மேகத்தைத் தழுவி தன்னுள் அரவணைக்கும் கடலலை காதலன்

ஆனால் போட்டா போட்டி போடும் பாம்புகளின் வீடியோ நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.  

இந்த வீடியோ பார்ப்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது. போட்டி என்று வந்துவிட்டால், பாம்பாக இருந்தாலும் விட்டு கொடுக்கத் தயாராக இல்லை என்பது புரிகிறது.

உணவு மட்டுமல்ல, உறைவிடத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சண்டை போடும் பாம்புகள் இவை என்பதையும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News