பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது

Last Updated : Nov 29, 2017, 03:47 PM IST
பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்! title=

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா-வின் விளம்பரம் ஒன்றிற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர்.

இந்த விளம்பரத்தில் ‘Ink, Not Mink! Be Comfortable in Your Own Skin, and Let Animals Keep Theirs.’ எனும் வாசகம் குறிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது, நாம் நிம்மதியாக வாழ விரும்புவது போல் அவற்றையும் வாழ விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினையும் அவருடன் இணைந்து பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக அசைவத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அரைநிர்வாணமாக புகைப்படம் ஒன்றில் சன்னிலியோன் தோன்றியது குறிப்பிடத்தக்கது!

தற்போது இந்த வீடியோ மற்றம் விளம்பரப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News