ஆஹா, இப்டி குளிக்கிறது எம்புட்டு நல்லா இருக்கு.... ஜாலியாய் குளிக்கும் கரடி!!

ஒரு கரடி ஜாலியாய் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!! 

Last Updated : Sep 21, 2020, 01:29 PM IST
ஆஹா, இப்டி குளிக்கிறது எம்புட்டு நல்லா இருக்கு.... ஜாலியாய் குளிக்கும் கரடி!! title=

ஒரு கரடி ஜாலியாய் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!! 

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒரு கரடி ஜாலியாய் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரு தண்ணீரில் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியில், கரடி நீச்சல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆக்கி (@akkitwts) என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 15 வினாடிகளை உடைய அந்த வீடியோவில், தொட்டிக்குள் ஆனந்தமாக நீச்சல் அடித்து கொண்டிருக்கிறார். அந்த தொட்டியில் வட்டமிட்டு கொண்டே அவர் குளியலை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. மேலும், அந்த வீடியோவை "ஒரு கரடியின் குளியால்" என்ற தலைப்புடன் அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிட்ட சில மணி நேரங்களுக்குள் பல விருப்பங்களையும் மறு ட்வீட்ஸையும் பெற்றது. மேலும், நீங்கள் அதை விரும்புவீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கருத்துகள் பிரிவில், மக்கள் கிளிப்பைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு அதை இனிமையான மற்றும் அபிமான போன்ற சொற்களால் விவரித்தனர்.

Trending News