வீடியோ: காட்டுத்தீ-யில் சிக்கிய முயல், அதை காப்பாற்றும் இளைஞர்!

35 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முயலின் போராட்டம் மற்றும் ஒரு அப்பாவியின் பரிதவிப்பு என இரண்டும் பதிவாக்கப்பட்டுள்ளது

Last Updated : Dec 8, 2017, 02:23 PM IST
வீடியோ: காட்டுத்தீ-யில் சிக்கிய முயல், அதை காப்பாற்றும் இளைஞர்! title=

காட்டுமிராண்டித் தனமாக இயங்கும் மனிதர்களுக்கு மத்தியில், ஒரு முயலிடம் பாசம் காட்டிய மனிதனை பற்றிய வீடியோ ஒன்று இணைய பிரியர்களால் தற்போது பரவலாக பகரப்பட்டு வருகிறது.

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டு பலரை துயரப்படுத்தியது, பல்லாயிரக் கணக்கானோரின் உயிரை விலை கேட்டது. பலரை தங்கள் இருப்பிடங்களை விட்டு குடும்பத்தோடு வெளியேற வைத்தது. 

இந்த காட்டுத்தீ ஆனது மனிதர்களை மட்டம் அல்ல விலங்குகளையும் விட்டு வைக்க வில்லை. ஆம் இந்த காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட முயல் ஒன்று உயிருக்கு போராடி ஓடிய போது அதனை காப்பாற்றிய மனிதரின் வீடியோ தான் இது.

நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சி, கடந்த வியாழக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தினில் இந்த வீடியோவினை பதிவிட்டுள்ளது.

35 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முயலின் போராட்டம் மற்றும் ஒரு அப்பாவியின் பரிதவிப்பு என இரண்டும் பதிவாக்கப்பட்டுள்ளது. பார்பவரின் மனதை கரைக்கும் இந்த வீடியோ உங்களுக்காக!

(Video Courtesy: Twitter/@NatGeo)

 

Read this story in ENGLISH

Trending News