காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி நீள ராஜநாகம்.. பதறவைக்கும் வைரல் வீடியோ

பாம்புகளை பிடிக்கும் நபர் ஒருவர் 15 அடி நீள ராஜநாகமொன்றை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2023, 02:08 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • 15 அடி நீள ராஜநாகமொன்றை பத்திரமாக மீட்டனர்.
  • காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி நீள ராஜநாகம்.
காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி நீள ராஜநாகம்.. பதறவைக்கும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் தினம் தினம் பல வித்தியாசமான, ஆச்சர்யம் அளிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில், அன்றாட வேலை பளு மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியில் மனதை லேசாக்க, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான வீடியோக்களை பார்ப்பதிலேயே மக்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் தினமும் பகிரப்படும் பல வீடியோக்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் பாம்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்த வீடியோக்களில் சில நம்மை சிரிக்க வைத்தாலும், சில நம்மை சிந்திக்கவும், அழவும், வியக்கவும் வைக்கின்றன. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக பாம்புகள் வீடியோ பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதன்படி தற்போது இங்கு ஒரு ராஜ நாகம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. 

மேலும் படிக்க | அம்மாடி.. செம அடி: வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை.. செருப்பாலயே அடித்த மாமனார், வைரல் வீடியோ

ராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.

இந்த நிலையில் இங்கு வைரலாகி வரும் வீடியோவில், ராஜ நாகம் சுமார் 15 அடி நீளம் இருப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது 15 அடி நீளமுள்ள இந்த பாம்பு காருக்கு அடியில் மறைந்திருப்பதை காணலாம். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் பாம்பைப் பிடிக்கும் பயிற்சி பெற்ற ஆடவர் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நிதானமாக பாம்பை ஒரு பைக்குள் அடைத்தார். அந்த பாம்பு பின்னர் காட்டில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராஜநாகத்தின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோ பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை இந்திய வனத்துறையின் உயர் அதிகாரியான சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுக்ளை அளித்து வருகின்றனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீயா...நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய எருமைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News