நீயா...நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய எருமைகள்

Viral Video: வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு எருமைகளுக்கு இடையே நடக்கும் சண்டை காட்சி வெளியாகி உள்ளது, இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2023, 03:01 PM IST
  • இரண்டு எருமைகளுக்கு இடையே நடக்கும் சண்டை காட்சி.
  • இன்றைய வைரல் வீடியோ.
நீயா...நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய எருமைகள் title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் தினம் தினம் பல வித்தியாசமான, ஆச்சர்யம் அளிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில், அன்றாட வேலை பளு மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியில் மனதை லேசாக்க,  மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான வீடியோக்களை பார்ப்பதிலேயே மக்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் தினமும் பகிரப்படும் பல வீடியோக்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் யானைகள் தொடர்பான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்த வீடியோக்களில் சில நம்மை சிரிக்க வைத்தாலும், சில நம்மை சிந்திக்கவும், அழவும், வியக்கவும் வைக்கின்றன. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக வனவிலங்குகளுக்கு இடையேயான சண்டை என்றால் பயங்கரமாக இருக்கும். பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். பாம்பு பருந்து, பாம்பு நாய், பூனை நாய், யானை யானை இடையே சண்டைகள் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி இருக்கின்றன. அந்த வகையில், இடந்து எருமை மாடுகளுக்கு இடையேயான பயங்கர சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | 'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்

இந்த நிலையில், இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாவதற்குக் காரணம் என்ன? இதற்கான பதிலை சொல்வது கடினமானது என்றாலும், மக்களின் விருப்பமாக இருப்பது சண்டை வீடியோக்கள் என்பதை மறுக்க முடியாது. தெருரில் இரண்டு காளை மாடுகள் தங்கள் கொம்புகளை மோதிக் கொண்டு விடைத்துக் கொண்டு நிற்பதுடன் தொடங்கும் வீடியோ, ஒன்றையொன்று கொம்புகளால் மோதி ஆக்ரோஷமாக சண்டையிடுவதைக் காட்டுகிறது.

சமூக ஊடகங்களின் பட்டையை கிளப்பும் எருமை மாடுகளின் சண்டை வீடியோ இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காளைகளின் ஆக்ரோஷத்தைப் பார்த்து, அங்கிருக்கும் மக்கள் தெறித்து ஓடுகின்றனர். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுக்ளை அளித்து வருகின்றனர்.

வைரலாகி வரும் சுமார் ஒரு நிமிட வீடியோவில், இரண்டு காட்டெருமையும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொள்கிறது. பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கும் இந்த வீடியோ தற்போது அதிகளவில் வைரலாகி வருகின்றனது.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News