’அடி வாங்கும் கணவன்’ தர்பூசணிக்காய் மூலம் தப்பிக்கும் மனைவி - வைரல் வீடியோ

கணவனை லாவகமாக மனைவி ஏமாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 21, 2022, 03:12 PM IST
’அடி வாங்கும் கணவன்’ தர்பூசணிக்காய் மூலம் தப்பிக்கும் மனைவி - வைரல் வீடியோ title=

டிக்டாக் வந்தபிறகு வீடியோ பிளாட்பார்மில் கியூட்டான வீடியோக்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. ரிலாக்ஸ் தேவைப்படும்போதெல்லாம் டிக்டாக் அல்லது யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஓபன் செய்தால், நேரம் செல்வதே தெரியாது. வித்தியாசமாக கன்டென்ட் யோசித்து, எடுக்கப்படும் வீடியோகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. குறிப்பாக, சமூகத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும் கணவன் - மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டை, அரசியல் வாதிகளை நையாண்டி செய்வது உள்ளிட்ட தலைப்புகளை ஒட்டி எடுக்கப்படும் வீடியோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு இருக்கிறது.

மேலும் படிக்க | குதிரை மீது சொகுசாக சவாரி போகும் நாய் குட்டி; இணையத்தை கலக்கும் வீடியோ

மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு அந்த வீடியோக்களை ரசிக்கின்றனர். சிலர் உண்மையென்று கூட நம்பிக் கொள்கின்றனர். அந்தளவுக்கு வீடியோவை உருவாக்குவதில் உண்மைத் தன்மையை கிரியேட்டர்கள் கொண்டு வருகின்றனர். அப்படியான வீடியோ தான் இன்றைய வைரல் வீடியோ லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. கணவனை மனைவி ஏமாற்றி, அடி வெளுக்கும் வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. டிக்டாக்கில் செய்யப்பட்ட அந்த வீடியோ, டிவிட்டர் தளத்திலும் வைரலாகியிருக்கிறது என்றால், அந்த வீடியோவை எத்தனை பேர் ரசித்திருப்பார்கள் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

வீடியோவின் மையக்கரு என்னவென்றால், கண்களைக் கட்டிக் கொண்டு கணவன் மனைவி இருவரும், இன்னொருவரின் தலையில் வாட்டர் பாட்டிலால் அடிக்க வேண்டும். கணவன் தன் கண்களை இறுகக்கட்டிக் கொள்கிறார். மனைவியும் கணவன் கண் முன்னால் கண்களை இறுக் கட்டிக் கொண்டது போல் பாசாங்கு செய்துவிட்டு பின்னர், அந்த கட்டை அவிழ்த்துவிடுகிறார். கணவன் மனைவி தலை மீது அடிக்க, மனைவியும் கணவனின் தலை மீது செல்லமாக அடிக்கிறார். பின்னர் திடீரென பூசணிக்காயை எடுத்து வைத்து, கணவன் அடிக்கும்போது அதன் மீது அடி வாங்கிக் கொண்டு, கணவனை உண்மையாக அடிக்கிறார். இந்த வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. 

மேலும் படிக்க | பேருந்து சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை; உயிர் காத்த ‘Helmet’; பதற வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News