குதிரை மீது சொகுசாக சவாரி போகும் நாய் குட்டி; இணையத்தை கலக்கும் வீடியோ

இணையத்தில் நாய்களின் குறும்புகளை காட்டும் வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை நம் மனதை லேசாக்கி, முகத்திலும் புன்னகையை வரவழைக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2022, 01:45 PM IST
  • செல்ல பிராணிகளின் குறும்புக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
  • குதிரை நகரம் முழுவதும் உலா வருகிறது.
  • ட்விட்டரில் பகிரப்பட்ட சிறிய வீடியோவில், குதிரையின் முதுகில் மகிழ்ச்சியுடன் ஹாயாக சவாரி செய்வதைக் காணலாம்.
குதிரை மீது சொகுசாக சவாரி போகும் நாய் குட்டி; இணையத்தை கலக்கும் வீடியோ title=

சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், விலங்குகள் அல்லது செல்லப்பிராணிகள் குறும்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் வீடியோக்கள் என்றும் பயனர்களின் பேராதரவைப் பெறுகின்றன. செல்ல பிராணிகளின் குறும்புக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளனர் என்றால் மிகையில்லை. அதிலும் இணையத்தில் நாய்களின் குறும்புகளைக் காட்டும் வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை நம் மனதை லேசாக்கி, முகத்திலும் புன்னகையை வரவழைக்கின்றன.

அந்த வகையில் நாய் ஒன்று குதிரையில் சவாரி செய்யும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.ட்விட்டரில் பகிரப்பட்ட சிறிய வீடியோவில், குதிரையின் முதுகில் மகிழ்ச்சியுடன் ஹாயாக சவாரி செய்வதைக் காணலாம். மறுபுறம், குதிரை நகரம் முழுவதும் உலா வருகிறது. அதோடு போக்குவரத்து சிக்னலில் கூட நிற்கிறது. போக்குரவத்து சிக்னலை மதித்து செயல்படும் குதிரைக்கும் பாராட்டுக்கள், இணைய தளத்தில் குவிந்து வருகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

வைரலான  வீடியோவை இங்கே காணலாம்:

அந்த வீடியோ எடுத்த இடம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ மூன்று வீடியோக்களின் தொகுப்பாகும். பகிரப்பட்ட உடனேயே, இந்த பதிவு இணையத்தை கலக்கி வருகிறது. இது கிட்டத்தட்ட 400,000 பார்வைகளையும் 20,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளிக் குவித்துள்ளது. இது குறித்து கருத்து பதிவிட்ட ஒரு பயனர், “இங்கே என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை, ஆனால் எனக்கு இந்த காட்சி மிகவும் பிடித்துள்ளது” என  பதிவிட்டுள்ளார். சுவாரஸ்யமான விலங்கு வீடியோ இணைத்தை பெரிய அளவில் கலக்கி வருகிறது. போக்குவர்த்து விதிகளை மதிக்கும் குதிரையின் பண்பும், நாயின் குறும்புத்தனமும் உங்கள் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது அல்லவா... 

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News