Tesla காரை வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்.. காரணம் என்ன தெரியுமா..!!!

சிறப்பு அம்சங்கள் உள்ள காரை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், விற்பனைக்கு பிந்தைய சேவையும் மிக முக்கியம். இல்லை என்றால், அதுவே பெரும் தோல்விக்கு காரணமாகி விடும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2021, 07:06 PM IST
  • அதிநவீன தொழில்நுட்பமும், மட்டும் போதாது, விற்பனைக்கு பிந்தைய சேவை மிக முக்கியம்.
  • அதிருப்தி வாடிக்கையாளர், டெஸ்லா Model S உரிமையாளர் பின்லாந்தைச் சேர்ந்தவர்.
Tesla காரை வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்.. காரணம் என்ன தெரியுமா..!!! title=

டெஸ்லா கார் நிறுவனம் EV துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்காலத்திற்கு ஏற்ற அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்க தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், சிறப்பு அம்சங்கள் உள்ள காரை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், விற்பனைக்கு பிந்தைய சேவையும் மிக முக்கியம். இல்லை என்றால், அதுவே பெரும் தோல்விக்கு காரணமாகி விடும். 

இந்நிலையில், நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் சொதப்பி ஒரு வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. கார் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க, அதிநவீன தொழில்நுட்பமும், மட்டும் போதாது, விற்பனைக்கு பிந்தைய சேவை மிக முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விற்பனைக்கு பிரகான சேவை தொடர்பாக அதிருப்தியடைந்த டெஸ்லா வாடிக்கையாளர் ஒருவர், தனது காரை 30 கிலோ எடையுள்ள டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்தார்.

அதிருப்தி வாடிக்கையாளர், டெஸ்லா (Tesla) Model S உரிமையாளர் பின்லாந்தைச் சேர்ந்தவர். கைமென்லாக்சோ பகுதியில் உள்ள பனி மூடிய கிராமமான ஜாலாவில் அவர் தனது காரை டைனமைட் கொண்டு தகர்த்தார். கார் உரிமையாளர் Tuomas Katainen, உலகின் கவனத்தை ஈர்க்க விரும்பி, டெஸ்லா நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் உள்ள தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

வீடியோவை இங்கே காணலாம்:

வாகனத்தில் கருவியில் எரர் கோட் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக டூமாஸ் கூறினார், அதைத் தொடர்ந்து டெஸ்லா சேவை மையத்திற்கு கார் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, டூமாஸுக்கு $22,480 (ரூ. 17 லட்சம்) செலவாகும்  எனவும் முழு பேட்டரி பேக்கையும் சரிசெய்யாமல் பழுதுபார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கார் எட்டு ஆண்டு கால பழமையானது என்பதால், வாகனத்திற்கான வாரெண்டியும் காலாவதியானது. இதனால், இவ்வளவு செலவு செய்து பழுது பார்ப்பதில் உபயோகம் எதுவும் இல்லை எனக் அவர் காரை டைமமைட் கொண்டு தகர்க்க முடிவு செய்தார்.

ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!

 

யூடியூப்பில் உள்ள இந்த வீடியோ பின்லாந்தின் பனி மூடிய கிராமப்புறத்தின் காட்சியுடன்தொடங்குகிறது. அதன்பின் டூமாஸ் தனது வெள்ளை நிற டெஸ்லாவை பின்னால் நிறுத்தி வைத்து ஒரு குழுவுடன் பேசுவதைக் காட்டுகிறது.

குழுவானது டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் உருவ பொம்மையை காருக்குள் வைத்தது. அதில் ஹெல்மெட் இருந்தது. உருவ பொம்மை காரின் முன் இருக்கையில் கட்டப்பட்டிருந்தது.

ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News