Viral Video: ‘ஃபேஷன் ஷோவிற்கு’ தயாராகும் காகம்; சொக்க வைக்கும் ஒய்யார நடை!

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 26, 2022, 06:34 PM IST
  • பறவைகளின் வேடிக்கையான, செயல்கள் அல்லது குறும்புகள் நம் மனதை லேசாக்குபவை.
  • வீடியோக்கள் காண்பதற்கு சுவாரசியமாகவும், மனதை கவரும் வகையிலும் இருக்கின்றன.
  • இணைய பயனர்களை மிகவும் மகிழ்விக்கின்றன.
Viral Video: ‘ஃபேஷன் ஷோவிற்கு’ தயாராகும் காகம்; சொக்க வைக்கும் ஒய்யார நடை! title=

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் பறவைகள் அல்லது விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும், பறவைகள், பாம்பு, யானை, பூனை, குரங்கு போன்ற விலங்குகளின் அரிய தருணங்களை காட்டும் வீடியோக்களுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பறவைகளின் வேடிக்கையான, செயல்கள் அல்லது குறும்புகள் நம் மனதை லேசாக்குபவை. பார்த்தாலே சிரிப்பை வரவழைக்க கூடியவை. பறவைகளின் வேடிக்கை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ரசித்து பார்க்கப்படுகின்றன. இந்த வீடியோக்கள் காண்பதற்கு சுவாரசியமாகவும், மனதை கவரும் வகையிலும் இருக்கின்றன. இவை இணைய பயனர்களை மிகவும் மகிழ்விக்கின்றன. அந்த வகையில் காகத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாடல்கள் தோற்றுப் போகும் வகையில், காகம் ஒன்று அசைந்து அசைந்து வருவதைக் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், காகத்தின் ஒய்யார நடையை கண்டால் வியக்காமலும் ரசிக்காமலும் இருக்க முடியாது. 

காகத்தின் ஒய்யார நடையை வீடியோவை இங்கே காணலாம்:

சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி ரீட்வீட் செய்து வருகின்றனர். இந்த காகத்தின் ஒய்யார நடை வீடியோவிற்கு பயனர்களிடமிருந்து பல விதமான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. வீடியோ அக்டோபர் 15 அன்று பகிரப்பட்டது. பதிவிடபட்டதிலிருந்து 868.5k பார்வைகளுக்கு மேல் குவிந்துள்ளது. அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!

மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News