Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

காட்டு வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதனால், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2023, 03:36 PM IST
  • முதலை மீது சிங்கங்கள் நடத்தும் தாக்குதல்.
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ.
  • சிங்கம் காட்டின் ராஜா என கூறப்படுவதில் இருந்து நாம் அதன் வலிமையை புரிந்து கொள்ளலாம்.
Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்! title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம்நமக்கு தினமும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கலாம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அகாட்டு வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதனால், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சிங்கங்களிடம் முதலை ஒன்று சிக்கித் தவிப்பதைக் காணலாம். சிங்கம் காட்டின் ராஜா என கூறப்படுவதில் இருந்து நாம் அதன் வலிமையை புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் முதலை ஒன்று சிங்கக் கூட்டத்தின் நடுவில் சிக்கிக் கொள்வதைக் காணலாம். தண்ணீருக்கும் மீண்டும் போக விடாமல், சிங்கங்கள் அதன் மீது பல முனை தாக்குதல்கள் நடத்துகின்றன

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

முதலை மீது சிங்கங்கள் நடத்தும் தாக்குதல்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் குழுவாக ஒரு முதலையை சுற்றி வளைப்பதைக் காணலாம். ஆனால் பின்னர் சிங்கங்களின் கூட்டம் அந்த முதலையை அட்டாக் செய்ய தொடங்குகிறது. அனைத்து சிங்கங்களும் ஒன்று சேர்ந்து முதலையை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துகொள்வதைப் பார்க்கலாம். குறிப்பாக ஒரு சிங்கம் முதலையின் காலை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறது. சிங்கம் மற்றும் முதலை தொடர்பான இந்த வீடியோ வனவிலங்கு @latestkruger என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்களும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News