Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

பாம்பு  என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அது ராட்சஸ பாம்பு என சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சஸ பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும். ராட்சஸ பாம்பு தனது விஷத்தை பரப்பி மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2023, 08:31 PM IST
  • பெரிய மலைப்பாம்பு ஒன்றை ராட்சஸ பாம்பு ஒன்று விழுங்க முயற்சிப்பதைக் காணலாம்.
  • பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும்.
  • பெரிய மலைப்பாம்பை கூட ராட்சஸ பாம்பு எளிதில் விழுங்கும்.
Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

பாம்பு  என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அது ராட்சஸ பாம்பு என சொன்னால் கேட்கவே வேண்டாம். ராட்சஸ பாம்பு மிகவும் ஆபத்தான பாம்பு இனமாகும். ராட்சஸ பாம்பு தனது விஷத்தை பரப்பி மற்ற பாம்புகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது. ராட்சஸ பாம்பு ஒன்று பாம்பை தின்னும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெரிய மலைப்பாம்பை கூட ராட்சஸ பாம்பு எளிதில் விழுங்கும்.

வைரலாகும் காணொளியில், பெரிய மலைப்பாம்பு ஒன்றை ராட்சஸ பாம்பு ஒன்று  விழுங்க முயற்சிப்பதைக் காணலாம். ராட்சஸ பாம்பு, மலைப்பாம்பின் பாதியை விழுங்கி விட்டது. பின்னர் மீதியையும் சாப்பிட முயல்வதை வீடியோவில் காணலாம். 

மேலும்படிக்க | Viral Video: கிளி பேசி பார்த்திருப்பீங்க.... பியானோ இசைத்து பார்த்திருக்கீங்களா!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 ராட்சஸ பாம்பு ஒன்று மலைப்பாம்பை சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில்  The Real Tarzan (therealtarzann) என்ற பயனர் கணக்கில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை ஏற்கனவே 2.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராட்டில்ஸ்னேக் மிகப்பெரிய பாம்பு இனமாகும். மலைப்பாம்புகள் 20 அடி நீளம் வரை வளரும், ஆனால்  ராட்டில்  ஸ்னேக் வகை பாம்பு மிக நீளமான விஷ பாம்பு.  முழுமையாக வளர்ந்த பாம்பு 19 அடி நீளம் வரை இருக்கும். வயது முதிர்ந்த பாம்பு சராசரியாக 13 அடி நீளத்தையும் 6 கிலோகிராம் வரை எடையும் அடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News