தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்

சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் வீடியோவில் காணப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 03:00 PM IST
தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல் title=

கவுகாத்தி: அஸ்ஸாமில் மூன்று வயது சிறுமி யானையிடம் பால் குடிக்க முயலும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மனதைக் கவரும் காட்சியாக அமைந்துள்ளது. அந்த 3 வயது சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் அந்த வீடியோவில் காணப்பட்டது. அதேபோல யானையும் தன் தும்பிக்கையை அந்த சிறுமியிடம் அசைத்து விளையாடுவதை காணலாம். 

இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் (Assam Video) கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் (Social Media) பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது.

LSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!

அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

 

 

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News