Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!

விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 13, 2023, 05:41 PM IST
  • வைரலாகும் பூனைகளின் புட்பால் மேட்ச்
  • விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை.
  • பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன.
Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’...  பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்! title=

விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும்போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன எனவும் கூறுகின்றனர். அந்த வகையில் பூனையின் டீம் ஒன்று புட்பால் விளையாடும் அசத்தலான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரலான வீடியோ, பூனைக்களின் டீம் புட்பால் விளையாடுவதைக் காணலாம். எல்லா விதமான மன அழுத்தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பதற்றமில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ வரப்பிரசாதம் எனலாம். மூன்று பூனைகள் விளையாடிய கால்பந்து போட்டி ட்விட்டரில் வைரலானது.

மேலும் படிக்க | Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசால்டாக அள்ளி வீசும் நபர்!

பூனைகள் புட்பால் விளையாடும் வைரல் வீடியோ:

மெஸ்ஸியை மிஞ்சும் மியாவ், அல்லது ரொனால்டோவை மிஞ்சும் சாம்பியன் என அழைக்கக்கூடிய ஒரு பூனை, முன்னால் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை வீசியது. ஆனால் மிகவும் திறமையான பூனை அதனை மிக லாவகமாக தடுத்தது. ஆனால் தடுக்கப்பட்ட பந்து மட்டும் மற்றொரு பூனையின் தலைதாக்கியது.  பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வீடியோ ட்விட்டர் பக்கம் Buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 22 மணி நேரத்தில் 2.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த சம்பவம் வைரலாக பரவி, 23,000க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | ‘கரும்பு’ குடுத்துட்டு போங்க! மாமூல் வசூலிக்கும் டிராஃபிக் யானை போலீஸ் வீடியோ வைரல்

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News