’கரும்பு’ குடுத்துட்டு போங்க! மாமூல் வசூலிக்கும் டிராஃபிக் யானை போலீஸ் வீடியோ வைரல்

Latest Elephant Video Viral: ஒத்தை யானையாக இருந்தாலும், கோவமில்லாமா இப்படி பணிவா நடந்துக்குற யானைய பார்த்ததுண்டா? அரிய வீடியோ இணையதளங்களில் வைரல்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 9, 2023, 01:14 PM IST
  • ஒற்றை யானையின் ஒழுக்கமும் கட்டுப்பாடும்
  • நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர் யானை
  • இப்படி பணிவா நடந்துக்குற யானைய பார்த்ததுண்டா? அரிய வீடியோ இணையதளங்களில் வைரல்...
’கரும்பு’ குடுத்துட்டு போங்க! மாமூல் வசூலிக்கும் டிராஃபிக் யானை போலீஸ் வீடியோ வைரல் title=

கால மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டே இருக்கிறோம். பொழுதுபோக்கு என்பதும் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்ஹ்தில் பண்டிகைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இணைத்து மகிழ்ந்த மனிதர்களுக்கு, போக்க பொழுதே இல்லை என்று சொல்லும் அளவு, கைக்குள்ளே அடங்கிவிட்டது ‘மொபைல்’ என்னும் நவீன தொழில்நுட்ப சாதனம்.

இணையம் என்பது தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த ஒரு முன்னேற்றமாக பல்வேறு தலைமுறைகளை தாண்டி என்ன நடக்கும் என்பதையும் உருவகப்படுத்தி காட்டி நம்மை மலைக்க வைக்கிறது. தொழில்நுட்ப மேம்பாடு ஒரு பக்கம் என்றால், இணையத்தில் நமக்கு கிடைக்கும் செய்திகளையும் தகவல்களை படித்து பார்த்து கேட்டு என பல விதங்களில் அறிவை வளர்த்துக் கொள்கிறோம்.

அறிவு வளர்த்தல் என்பது ஒரு புறம் என்றால், இணையத்தில் பகிரபப்டும் விடியோக்களில் சில அனைவரையும் கவர்கிறது. அதிலும் காட்டு விலங்குகள் வீடியோக்கள் என்றால் அதை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். வன வாழ்க்கையில் தினசரி நடைபெறும் சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் நமக்கு தெள்ளத்தெளிவாக காட்டும் வீடியோக்கள் வியப்பளிக்கின்றன.

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும், ஒரு யானை ஒரு ஒழுங்குமுறையாக நின்று மனிதர்களிடம் இருந்து உணவை வாங்கும் வீடியோ ஆச்சரியமானதாக இருக்கிறது.

யானை கூட்டமாக இருந்தால் பயமில்லை, ஒன்றை யானையாக இருந்தால், அது சீற்றத்துடன் தாக்கும், தூக்கிப்போட்டு மிதிக்கும் என்று தானே கேள்விப்பட்டிருப்பீர்கள்? இல்லை நான் ஸ்பெஷல் என்று சொல்லும் இந்த யானை என்ன செய்கிறது? வீடியோவை பாருங்கள்...

இப்படி முறைப்படி நின்று, டிரைவரிடம் சென்று அனுமதி கேட்டு, கட்டுக்கட்டாய் லாரியில் அடுக்கியிருக்கும் கரும்புகளில் இருந்து தனக்கு வேண்டும் என்ற அளவு கரும்பை மட்டும் எடுத்துக் கொண்டு வழிவிடும் யானையைப் பார்த்ததுண்டா? இந்த வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  அதுமட்டுமல்ல, கரும்பு லாரிகளை மட்டுமே, இந்த யானை வழிமறிக்கிறது. வேறு வாகனங்களை வழி மறிக்காமல் சாலையில் ஒதுங்கி நிற்பதும் பார்க்கவே திகைப்பைக் கொடுக்கிறது.  

காடுகளில் வாழும் யானைகள், உணவுக்காக, மக்கள் வாழும் பகுதிக்குள் வரும்போது, ஆக்ரோஷமாக நடந்துக் கொள்ளும் என்பதும், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்துவிடும் என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். இல்லை, நான் மட்டும் ஸ்பெஷல் என்று தாய்லாந்து ஒற்றை  யானை ஆச்சரியமளிக்கிறது.

மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்காக இருந்தாலும், காட்டில் பேரழிவை உண்டாக்கி விடும் என்றும், நினைத்திருக்கும் நமக்கு இந்த வீடியோ ஆச்சரியத்தி ஏற்படுத்துவதில் வியப்பில்லை.

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

 ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த ‘மிலிட்ரி’ யானை வீடியோவுக்கு பலரும் ஜாலியான கமெண்ட்டுகளை அள்ளி வீசுவதோடு, வீடியோவை தங்கள் கணக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் இந்த வீடியோவுக்கு ஒருவர் என்ன கமெண்ட் எழுதியிருக்கிறார் தெரியுமா?

‘என்ன ஒரு நேர்த்தி! எனக்கு மாமூல் குடுத்துட்டு போங்க.... என்பதை எவ்வளவு டீசண்டா யானை புரிய வைக்குது. ஆனா, பலம் இருக்குங்கறதுக்காக, அடிச்சு புடுங்காத பழகக்த்தை வழக்காம வச்சிருக்க இந்த யானை சாரை பார்த்து நிறைய பேர் கத்துக்கனும்’! இந்த கமெண்ட் சரியா? 

 மேலும் படிக்க | நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News