விஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல்துறை துணை ஆணையர்

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

Last Updated : Jan 17, 2019, 06:13 PM IST
விஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல்துறை துணை ஆணையர் title=

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி அஜித்தின் விஸ்வாசம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் வசூல் வேட்டையில் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. வசூலில் ஒருபக்கம் சாதனை படைத்து வந்தாலும் விஸ்வாசம் படத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வருவது குறித்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
தலைமையிடம்
சென்னை மாநகரம்.

என தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending News