Viral Video: இப்படியா பண்ணுவீங்க... வெட்கத்தினால் முகம் சிவந்த மணமகள்

சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், திருமணத்தில் மணமக்கள் பரஸ்பரம் அழகான காதலை வெளிப்படுத்தும் வீடியோக்கள் என்றும் பயனர்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2022, 12:29 PM IST
  • மணமகனும், மணமகளும் செய்யும் சில குறும்புத்தனங்கள் அனைவரின் கவனத்தையும் வெலுவாக ஈர்க்கும்.
  • மணமக்கள் பரஸ்பரம் அழகான காதலை வெளிப்படுத்தும் வீடியோக்கள் என்றும் பயனர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
Viral Video: இப்படியா பண்ணுவீங்க... வெட்கத்தினால் முகம் சிவந்த மணமகள் title=

தற்போது திருமண சீசன் இல்லை என்றாலும், திருமணங்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் நிறைய வெளியாகின்றன. ஏனெனில் இவை எப்பொழுதுமே ரசிக்க கூடியவை தான். திருமணங்களில், ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாதவை. சில நேரங்களில் மணமகனும், மணமகளும் செய்யும் சில குறும்புத்தனங்கள் அனைவரின் கவனத்தையும் வெலுவாக ஈர்க்கும். சில நேரங்களில் அவர்களின் உறவினர்கள் செய்யும் கோமாளித்தனங்கள், மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களும் திருமண நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யத்தை சேர்க்கும். அங்கிருக்கும் சூழ்நிலையே மாறி விடும். 

அத வகையில் தற்போது மணமகன் மணமகள் இடையிலான காதலை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருவரும் மணப் பந்தலில் அமர்ந்து திருமணம் தொடர்பான சடங்குகளை மேற்கொள்வதைக் காணலாம். மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமத்தை பூசும் சடங்கும் அதில் ஒன்று. அவ்வாறு, மணமகளின் நெற்றியில் செந்தூரத்தை வைக்கும் போது, தனது காதலை வெளிப்படுத்தும் வகையில், மணமகன், தனது காதலியின் கன்னத்தில் முத்தமிடுவதை வீடியோவில் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்: 

 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமண பந்தலில் உறவினர்கள் சுற்றி நிற்பதையும், பண்டிதரின் உத்தரவின் பேரில், மணமகன் தனது மணப்பெண்ணின் நெற்றியில் சிந்தூரம் வைப்பதையு காணலாம். ஆனால் இந்த நேரத்தில் மணமகண் மணமகளை முத்தமிட்டது யாரும் எதிரபாராத ஒன்று என்பதை அங்கிருப்பவர்கள் அனைவரின் சிரிப்பை வைத்து தெரிந்து கொள்ளலாம். 

 இந்த திருமணம் தொடர்பான வீடியோ, weddingworldpage என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ எப்படி வைரலாகி வருகிறது என்பதை அது பெறும் பார்வைகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News