Watch Viral Video: Flipkart கொடுத்த அதிர்ச்சி; iPhone 12-க்கு பதிலாக சோப்பு கட்டிகள்..!!

தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. வணிக ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களை கவர இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. 

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2021, 01:03 PM IST
Watch Viral Video: Flipkart கொடுத்த அதிர்ச்சி; iPhone 12-க்கு பதிலாக சோப்பு கட்டிகள்..!! title=

சமீப காலமாக மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்துள்ளது. அவசர ஓட்டத்தில் இருக்கும் மக்களுக்கு இது மிகவும் வசதியானதாக இருப்பதாலும், கடைகளுக்கு செல்லாமல், வீட்டிற்கே  பொருள் கைக்கும் வந்து விடுகிறது என்பதாலும், வயதானவர்களும் இ-காம்ர்ஸ் நிறுவனங்களில் பொருட்கள் வாம்க்குவது அதிகரித்துள்ளது.  

தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. வணிக ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களை கவர இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த சலுகை காரணமாக நீங்கள் ஈர்க்கப்பட்டு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகின்றனர். 

ஆனால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்களுக்கு சரியாக கிடைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேற ஒருபொருள் டெலிவரி செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. பல மோசடிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 (Apple iPhone 12) ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு சோப்பு கட்டியை அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளது பிளிப் கார்ட் (Flipkart) நிறுவனம்.  சிம்ரன்பால் சிங் என்பவருக்கு ஐபோனுக்குப் பதிலாக 2 நிர்மா சோப்பைப்  பெற்றதால் அதிர்ச்சி அடைந்தார். ஈ-காமர்ஸ் வலைத்தளத்தின் பிக் பில்லியன் டேஸ் சேலின் (Big Billion Days Sale) போது பிளிப்கார்ட்டில் ஐ போன் ஆர்டர் செய்தார்.

ALSO READ | இளைஞனின் ‘தற்கொலை’ முயற்சி; BMW காருக்கு நேர்ந்த சோதனை..!!

ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் வாடிக்கையாளரின் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேகேஜை டெலிவரி செய்யும் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ஆர்டரை வாடிக்கையாளர் பெற்றுக்கொண்டார்  என்பதை உறுதி படுத்தும்  OTP யைப் பகிர்ந்து கொள்ள வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். டெலிவரி நபர் பேக்கேஜை திறக்கும்போது, ​​ரூ.53,000 மதிப்பிலான ஐபோன் 12 க்கு பதிலாக பெட்டிக்குள் ரூ .5 மதிப்புள்ள இரண்டு சோப் பார்கள் இருப்பதைக் காணலாம்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

பிளிப்கார்ட் மிகவும் நம்பகமான இ-காமர்ஸ் தளமாக இருப்பதால், இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதை அடுத்து, சிங் ஃப்ளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவைக்கு புகார் செய்தார், மேலும் சில நாட்களுக்குப் பிறகு அவர் டெலிவரி பார்ட்னருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நிறுவனம் தவறை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. நிறுவனம் தொலைபேசி ஆர்டரை ரத்து செய்து வாடிக்கையாளருக்கு அதற்கான பணத்தை திருப்பி அளித்தது. வாடிக்கையாளரின்  வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ | பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் முன் இந்த வீடியோவை ஒரு தரம் பாருங்கள்!

ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற விலை மதிப்பு மிக்க ஆர்டர்கள் விஷயத்தில், ​​வாடிக்கையாளர்கள், டெலிவரி செய்யும் நபர்களுக்கு முன்னாலேயே  இதுபோன்ற ஆர்டர்களைத் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News