பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் முன் இந்த வீடியோவை ஒரு தரம் பாருங்கள்!

Viral News: தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேற ஒருபொருள் டெலிவரி செய்யப்படுகிறது என்ற குற்றச்சாற்று அதிகரித்துள்ளது. பல மோசடிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 11:48 AM IST
பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் முன் இந்த வீடியோவை ஒரு தரம் பாருங்கள்! title=

Viral News: சமீப காலமாக இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதற்கிடையில், தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. வணிக ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த சலுகை காரணமாக நீங்கள் ஈர்க்கப்பட்டு ஆன்லைனில் பல விதமான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகின்றனர். ஆனால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்களுக்கு கிடைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேற ஒருபொருள் டெலிவரி செய்யப்படுகிறது என்ற குற்றச்சாற்று அதிகரித்துள்ளது. பல மோசடிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் .. ஹோம் டெலிவரியின் போது மற்றொரு பொருள் டெலிவரி செய்யப்படுகிறது என நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். சமீப காலமாக இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் பிளிப்கார்ட் பில்லியன் நாட்கள் சேல் விற்பனையில் ஒருவர் பவர் பேங்க் ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அவருக்கு கிடைத்தது வேறு ஒரு பொருள் டெலிவரி செய்யப்பட்டது. அதைக்குறித்து பார்ப்போம்..

ALSO READ | Viral Video: நெருங்கி நின்ற மணமகன் - மணமகள்; திருமண நிகழ்ச்சியில் ருசிகரம்

ராகுல் என்ற பயனர் 2000mah பவர் பேங்கை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அது தொடர்பான பார்சல் வீட்டிற்கு வந்தது. மேலும் அவர் அதை மிகவும் ஆர்வமாக திறந்துள்ளார். அதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பவர் பேங்க்கு பதிலாக ஒரு செங்கல் துண்டு இருந்துள்ளது. இதைக்கண்ட  அவர் உடனடியாக பிளிப்கார்ட்டில் புகார் செய்தார். தனது ஆர்டர் ஐடியைக் குறிப்பிட்டு, அவர் பிளிப்கார்ட்டுக்கு ட்வீட் செய்தார். அதில் 20000mah பவர் பேங்கிற்கு பதிலாக செங்கலை அனுப்பியதற்கு நன்றி' எனப் பதிவிட்டுள்ளார். மற்ற பயனர்களும் இதே போன்ற பிரச்னையை எதிர்க்கொண்டதாக புகாரளித்துள்ளனர்.

 

 

லைட்டர்களுக்கு பதிலாக நட்-போல்ட்.

 

ட்ரூக் பட்ஸுக்கு பதிலாக காலி டப்பா:

ALSO READ | எப்படிப்பட்ட பெண் வேண்டும்? பதிலைக் கேட்டால், சிரிப்பை அடக்க முடியாது: Watch Video

 

ப்ளூடூத் Ear Buds-க்கு பதிலாக சோப்பு

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News