Viral Video: வேணாம்.. என் கிட்டே வச்சுக்காதே... சீண்டிய முதலையை துவம்சம் செய்த யானை!

Viral Video: வன வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் விளக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது, ஒன்றை யானை ஒன்று முதலையை துவம்சம் செய்யும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2023, 04:44 PM IST
  • காடுகளில் வாழும் யானைகள் மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகள்.
  • வன வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் விளக்கும் வீடியோ.
  • யானைகள் தங்கள் காலடியில் போட்டு மிதித்து எந்த விலங்குகளையும் கொல்லும் திறன் கொண்டவை.
Viral Video: வேணாம்.. என் கிட்டே வச்சுக்காதே... சீண்டிய முதலையை துவம்சம் செய்த யானை!  title=

இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் சுவாரஸ்யமான காட்டு விலங்குகள் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வன வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் விளக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது, ஒன்றை யானை ஒன்று முதலையை துவம்சம் செய்யும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காடுகளில் வாழும் யானைகள் மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகள் என்பதும் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை கோபமடைந்தால், அவை காட்டில் ஒரு பேரழிவை உண்டாக்கி விடும். யானைகள் தங்கள் காலடியில் போட்டு மிதித்து எந்த விலங்குகளையும் கொல்லும் திறன் கொண்டவை. ஆனால் முதலைகளும் யானைகளைப் போலவே சக்திவாய்ந்ததாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகின்றன. குறிப்பாக தண்ணீரில் முதலை மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யானையும் முதலையும் சந்தித்து கொண்டால் அங்கே ஒரு போர்களம் உருவாவது நிச்சயம் எனலாம்.

மேலும் படிக்க | Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசால்டாக அள்ளி வீசும் நபர்!

வைரலாகும் யானை - முதலை வீடியோ!

 

 

ஆச்சரியமான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில் ஒரு யானை தனியாக தன்னை சீண்டிய முதலையை மிதித்து துவம்சம் செய்வதைக் காணலாம். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் beautiful_post_4u என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. தன்னை சீண்டிய முதலையில் செயல் யானைக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே முதலையை தாக்கினார். ஒரு அதிர்ச்சியான காட்சியில், கோபமடைந்த யானையை துவம்சம் செய்த விதத்தை பார்த்தால், நமக்கு அதிர்ச்சியாக உள்ளது. முதலையை தும்பிக்கையால் பிடித்து அங்கும் இங்கும் முதலில் வீசத் தொடங்கியது. முதலை ஓட முயன்ற நிலையில், உடனே யானை அதன் வாலைப் பிடித்து தூக்கி வீசியது. பாவம் முதலையால் அசையக்கூட முடியவில்லை.

மேலும் படிக்க | ‘கரும்பு’ குடுத்துட்டு போங்க! மாமூல் வசூலிக்கும் டிராஃபிக் யானை போலீஸ் வீடியோ வைரல்

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News