Viral Video: நீர்யானையிடம் சிக்கிய ஒற்றை சிங்கம்! உயிர் பிழைக்க தலைதெறிக்க ஓடும் அவலம்!

Viral Video of Lion Vs Hippo: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கம் வீரத்தில் சளைத்தது அல்ல. அதனுடன் சண்டை இடவோ அல்லது பகைத்துக் கொள்ளவோ எந்த விலங்கிற்கும் தைரியம் வராது. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக ஆகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2023, 04:23 PM IST
  • நீர்யானை, சிங்கத்தை ஓட ஓட விரட்டும் என்பதை பலரால் நம்ப முடியவில்லை.
  • வைரலான வீடியோவில் சிங்கம் ஆற்றில் ஒரு கல்லில் தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை தெளிவாக காணலாம்.
  • சிங்கத்தை நீர்யானைகள் கூட்டம் சூழ்ந்துள்ளது.
Viral Video: நீர்யானையிடம் சிக்கிய ஒற்றை சிங்கம்! உயிர் பிழைக்க தலைதெறிக்க ஓடும் அவலம்! title=

Viral Video of Lion Vs Hippo: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கம் வீரத்தில் சளைத்தது அல்ல. அதனுடன் சண்டை இடவோ அல்லது பகைத்துக் கொள்ளவோ எந்த விலங்கிற்கும் தைரியம் வராது. சிங்கத்தின் கம்பீரமான தோற்றமே நம்மை கதி கலங்கச் செய்யும், பிற விலங்குகள் அனைத்தும் பார்த்தாலே தலை தெறிக்க ஓடி விடும். ஆனால் நீர்யானை ஒன்று, அதன் எல்லையில் நுழைந்த சிங்கத்தை ஓட ஓட விரட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், நீர்யானை,  சிங்கத்தை ஓட ஓட விரட்டும் என்பதை பலரால் நம்ப முடியவில்லை.

வைரலான வீடியோவில் சிங்கம் ஆற்றில் ஒரு கல்லில் தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை தெளிவாக காணலாம். அதனை நீர்யானைகள் கூட்டம் சூழ்ந்துள்ளது. ஒரு நீர்யானை அதனைத் தாக்கும்போது, ​​சிங்கம் உடனடியாக தண்ணீரில் குதித்து, தப்பிக்க வேகமாக ஓடத் தொடங்கும் காட்சி அனைவரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தும்.

வீடியோவில்,  மூன்று சிங்கங்கள் ஆற்றைக் கடப்பதைக் காணலாம். தன்னுடைய ஏரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கங்களை பார்த்த ஒரு ராட்சத நீர்யானை, படு வேகமாக நீந்தி வருவதையும் காணலாம். அது நீந்தி வரும் வேகத்தை பார்த்தாலே அது எவ்வளவு ஆக்கிரோஷமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். வந்த அதே வேகத்தில், மூன்று சிங்கங்களில் ஒன்றை பிடித்து தாக்கி கரையை நோக்கி தள்ளுகிறது. உயிர் பிழைத்தால் போதும் என சிங்கம் தப்பித்து கரையேறுகிறது.

வைரல் வீடியோவை கீழே  காணலாம்:

நீர்யானை சிங்கத்தை தாக்கும் இந்த வீடியோ மார்ச் 14 அன்று லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற யூடியூப் சேனலில் இருந்து வெளியிடப்பட்டது. ட்விட்டரில் பதிவிடப்பட்ட, இந்த வீடியோ 4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதோடு, இந்த வீடியோவிற்கு ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

நீர்யானை பாலூட்டி இனம்.  தாவரங்களை உண்டு வாழும் இது கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. சிங்கங்களை விட இவை ஆக்கிரோஷமானவை  என கூறப்படுகிறது.  இவை 1500 முதல் 3200 கிலோகிராம் எடை உடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளை விட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் எல்லைக்குள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News