Viral Video: தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்

தாய்-மகள் ஜோடி மிகவும் பிரபலமான ஒரு பாடலுக்கு, பொருத்தமான ஆடைகளை அணிந்து, சரியான நேர்த்தியாக அழகாக நடனமாடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2022, 06:17 PM IST
  • இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் நம்மை பனதை பெரிதும் கவர்கின்றன.
  • இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video:  தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள் title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  நீங்கள் ஒரு இசை ஆர்வலராக இருந்தால்,  உலகம் முழுவதும்  மிகவும் பிரபலமான அலி சேத்தி மற்றும் ஷே கில் பாடிய அழகிய பாக்கிஸ்தானி பாடல்,  நிச்சயம் தெரிந்திருக்கும். உலகெங்கிலும் உள்ள பல இதயங்களை கவர்ந்துள்ள அந்த பாடலுக்கு, பல கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் தங்கள் அழகான பாடலைப் பகிர்ந்துள்ளனர். அதற்கு நடனமும் ஆடியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது, ​​இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  அதில் ஒரு தாய்-மகள் ஜோடி இந்த பாடலுக்கு, பொருத்தமான ஆடைகளை அணிந்து, இருவரும் பாடலுக்கு ஒத்திசைவாகவும் சரியான ஒருங்கிணைப்புடனும், மிகவும் நேர்த்தியாக அழகாக நடனமாடுகிறார்கள். அந்த திறமையான தாய்-மகள் ஜோடி நிவேதிதா மற்றும் இஷான்வி ஹெக்டே. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நிவி மற்றும் ஷிவி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு,  199 K ஃபாலோயர்கள் உள்ளனர். அந்த வீடியோவில், “நாங்கள் வழக்கமாகச் செய்வதிலிருந்து வித்தியாசமான ஒன்று. இந்தப் பாடலை மிகவும் ரசித்தேன், பலர் இதற்கு நடனமாடுங்கள் என கோரிக்கை வைத்ததால், இதை முயற்சிக்க என்ணினோம். எங்கள் நடனத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என பகிர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.  பயனர்கள் நேர்த்தியான நடனத்தைப் பாராட்டினர். ஒரு பயனர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “அழகான நடனம், மிகவும் ஒத்திசைவாக,  மிகவும் நேர்த்தியாக உள்ளது. நீங்கள் நடனமாடுவதை பார்ப்பது மிகவும் பிடிக்கும்." மற்றொருவர், “மிகச்சிறப்பாக இருந்தது! அசைவுகள் மற்றும் பாவனைகளும்!"  மற்றொருவர், "இந்த வகையான தாயும் மகளும் நம்மில் பலரை பாதிக்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News