பாம்புகளை செல்லமா தட்டி தூங்கவைக்கும் பெண்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ

Snakes with Woman: ஒரு பெண் தனது படுக்கையில் பாம்புகளுடன் படுத்து விளையாடி, அவற்றுடன் வெளியே சென்று, கழுத்தில் தொங்க வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2023, 12:45 PM IST
  • பல பாம்புகளுடன் உறங்கும் பெண்ணின் வீடியோ.
  • ஒரே நேரத்தில் பல பாம்புகளுடன் விளையாடுகிறார்.
  • பெண்ணின் வீடியோ வைரல் ஆனது.
பாம்புகளை செல்லமா தட்டி தூங்கவைக்கும் பெண்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பல பாம்புகளுடன் உறங்கும் பெண்: 

பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன். எவ்வளவு பாம்பு வீடியோக்களை நாம் பார்த்தாலும், நம் கண்முன்னால் ஒரு பாம்பு வந்தால், நாம் ஆடித்தான் போவோம். அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடிக்கவே நாம் எண்ணுவோம். 

ஆனால், தற்போது மிக வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது படுக்கையில் பாம்புகளுடன் படுத்து விளையாடி, அவற்றுடன் வெளியே சென்று, கழுத்தில் தொங்க வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த விஷயம் நிஜத்தில் நடந்துள்ளது. அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

ஒரே நேரத்தில் பல பாம்புகள் 

இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற பல வீடியோக்கள் ரேகா ராணி என்ற கணக்கில் உள்ளன. இந்த வீடியோவில் பாம்புகளுடன் ஒரு பெண் விளையாடுவது தெரிகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எந்த வீடியோவில் இந்த பெண் பாம்புகளுடன் காணப்பட்டாலும், அவை அனைத்திலும் பெண்ணுடன் பல பாம்புகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. சில நேரங்களில் அந்த பாம்புகளுடன் படுக்கையில் காணப்படுகிறார்,  சில சமயங்களில் அவர் வெளியில் அவற்றுடன் விளையாடுகிறார். இதுமட்டுமின்றி, பாம்புகளை அந்த பெண் தூங்கசெய்வதையும் ஈடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை! 

கருப்பு விஷப்பாம்பு

அந்த பெண் நடந்துகொள்வதைப் பார்த்தால், இது அவருக்கு ஒரு சாதாரண விஷயமாக தெரிகிறது. எனினும், இந்த காட்சியைப் பார்க்கும் சிலர் அச்சத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த பெண் தனது பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோக்களில் அவர் பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. பெண் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், அப்போது இரண்டு கருப்பு நிற ஆபத்தான விஷப்பாம்புகள் அவரது கழுத்தில் சுற்றி இருப்பதையும் ஒரு வீடியோவில் காண முடிகின்றது. 

மனதை கிடுகிடுக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunita Bai (@rekharani8717)

பெண்ணுக்கு தீங்கு செய்யவில்லை

அந்த பெண்ணின் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானவுடன், இணையவாசிகள் இதற்கு பல வித மக்கள் கமெண்டுகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இவை அனைத்தும் செல்லப் பாம்புகள் என்றும், இந்தப் பாம்புகளை அந்தப் பெண் வளர்த்து வந்துள்ளதால், அந்தப் பெண்ணுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். அதே சமயம், இத்தனை பாம்புகளை எப்படி அவர் வளர்க்கிறார் என்பது புரியவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | அடம்பிடித்த குழந்தை; அப்பாவுக்கு அறை விழுந்ததும் என்ன செய்தது? நீங்களே பாருங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News