Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை!

ஆஸ்ப்ரே பறவை வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்ப்ரே பறவை ஒரு தோட்டாவைப் போல் நீரை கிழித்துக் கொண்டு பாய்ந்து வேட்டையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 12:24 AM IST
  • தற்போது ஆஸ்ப்ரே பறவை வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • பறவை ஒரு தோட்டாவைப் போல் நீரை கிழித்துக் கொண்டு பாய்ந்து வேட்டையாடும் காணொளி.
Viral Video:நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை! கடலில் ஒரு மீன் வேட்டை! title=

சமூக ஊடக உலககில் என்னிலடங்காத ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பருந்து இனத்தை சேர்ந்த, ஆஸ்ப்ரே பறவை கடலின் நீரை கிழித்துக் கொண்டு மீனை வேட்டையாடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

தற்போது ஆஸ்ப்ரே பறவை வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்ப்ரே பறவை ஒரு தோட்டாவைப் போல் நீரை கிழித்துக் கொண்டு பாய்ந்து வேட்டையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 

இந்த வீடியோ கழுகு ஒன்று, நடு வானில் இருந்து பறந்து வந்து வேட்டையாடுவதை பார்ப்பதால் வியப்பு மேலிடும். கழுகு தோட்டா பாயும்  வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்தது. கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கும். 

சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், கழுகு கடலுக்கு மேல் பறப்பதைக் காணலாம், அப்போது  அதன் கண்கள் தண்ணீரில் பல மீட்டர் கீழே தண்ணீரில் இருந்த மீன் மீது விழுந்தன. அடுத்த நொடியே, நாம் பார்க்கும் காட்சி நம்மை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.  உண்மையில், இரையைப் பார்த்த கழுகு, தோட்டாவின் வேகத்தில் தண்ணீரில் பல அடிகள் கீழே  சென்று, நொடியில், மீனை தன் கால்களில் பிடித்துக் கொண்டு மேலே வந்தது. கழுகு எடை மிகுந்த மீனை சுமந்து கொண்டு காற்றில் பறந்ததைக் காணலாம்.

மேலும் படிக்க |  Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!

வீடியோவை இங்கே பார்க்கலாம்:

Jeff Corwin என்ற உயிரியல் ஆய்வாளர் பகிர்ந்து கொண்டுள்ள இந்த காணொளியில்,  
மார்க் ஸ்மித்  என்ற மிக சிறந்த புகைப்படக்காரர் எடுத்த புகைப்படத்தில், நம்ப முடியாத காட்சி பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  இந்த ஓஸ்ப்ரே பறவை வலிமைமிக்க மீன்-வேட்டைக்காரன் என்றால் மிகையில்லை. கடல் வேட்டையாடிய அந்த பறவை, ஒரு பாராகுடா மீனை அதன் கால்களில் பிடித்துக்கொண்டு வெளிப்படுகிறது. பாராகுடா என்ற இந்த துரதிர்ஷ்டவசமான மீன் ஒரு உறுதியான ஓஸ்ப்ரேயின் வேட்டையில் தன்னை இழக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான மான்... மனம் பதறவைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News