நபரிடம் கொஞ்சி விளையாடும் யானை: வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சேற்று நதியில் ஒரு யானையும் நபருடன் இருப்பதை வீடியோ காட்டுகிறது, அங்கு அந்த நபர் ஆற்றின் நடுவில் நிற்பதைக் காணலாம். அதேசமயம் யானை தும்பிக்கையை நீட்டி அந்த நபரின் கையைப் பிடித்து விளையாடுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2023, 02:53 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • யானையின் கியூட் வீடியோ.
நபரிடம் கொஞ்சி விளையாடும் யானை: வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன.  அதிலும் காட்டு வாழ்க்கையை காட்டும் வீடீயோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில் யானையின் வீடியோ ஒன்று இங்கு வைரலாகி வருகின்றது.

பொதுவாக யானைகள் மிகவும் கம்பீரமான விலங்குகள் மற்றும் காட்டில் அவற்றை எதிர்கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை. அவற்றின் மகத்தான அளவு மற்றும் வலிமை காரணமாக, சிங்கம் மற்றும் புலி போன்ற கொடூரமான மாமிச விலங்குகள் கூட அவற்றை எதிர்கொள்வதைத் தவிர்க்கின்றன. யானைகளுக்கும் காடுகளில் ஒரு கம்பீரமான தனி அந்தஸ்து வழங்கப்படுகிறது, அதேபோல் இந்த யானைகள் அன்பாகவும் செயல்படும், மறுபுறம் தேவைப்படும் போது மற்ற விலங்குகளுக்கு உதவவும் செய்யும். அந்தவகையில் சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். அதில் யானை அங்கிருந்த நபரை எவ்வளவு நேசிக்கிறது என்று வீடியோ காட்டப்பட்டுள்ளது. யானை அந்த நபரை ஆற்றை கடக்க விடாமல் தடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேற்று நதியில் ஒரு யானையும் நபருடன் இருப்பதை வீடியோ காட்டுகிறது, அங்கு அந்த நபர் ஆற்றின் நடுவில் நிற்பதைக் காணலாம். அதேசமயம் யானை தும்பிக்கையை நீட்டி அந்த நபரின் கையைப் பிடித்துள்ளது. மேலும் யானை நபரை கரைக்கு இழுக்கிறது. அந்த நபர் யானையை அணைத்து கொள்கிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு செம கியூட்டாக உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

யானையின் வீடியோவை இங்கே காணுங்கள்

இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இதை பார்த்துள்ளனர்.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மொட்டை மாடியில் பட்டையை கிளப்பிய சிறுமி: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News