மானுக்காக யானை போட்ட சண்டை.. இணையதளத்தை வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் யானையைப் பாராட்டுகிறார்கள், உண்மையில் இந்த வீடியோ இதயத்தை பெருமளவில் கவர்ந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2023, 02:08 PM IST
  • யானை மானின் உயிரைக் காப்பாற்றியது
  • யானையின் செயலை அனைவரும் பாராட்டிள்ளனர்
  • யானையின் இன்றைய வைரல் வீடியோ
மானுக்காக யானை போட்ட சண்டை.. இணையதளத்தை வியக்க வைக்கும் வைரல் வீடியோ title=

மான், முதலை மற்றும் யானையின் இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன.  அதிலும் காட்டு வாழ்க்கையை காட்டும் வீடீயோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில் யானையின் வீடியோ ஒன்று இங்கு வைரலாகி வருகின்றது.

பொதுவாக யானைகள் மிகவும் கம்பீரமான விலங்குகள் மற்றும் காட்டில் அவற்றை எதிர்கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை. அவற்றின் மகத்தான அளவு மற்றும் வலிமை காரணமாக, சிங்கம் மற்றும் புலி போன்ற கொடூரமான மாமிச விலங்குகள் கூட அவற்றை எதிர்கொள்வதைத் தவிர்க்கின்றன. யானைகளுக்கும் காடுகளில் ஒரு கம்பீரமான தனி அந்தஸ்து வழங்கப்படுகிறது, அதேபோல் இந்த யானைகள் அன்பாகவும் செயல்படும் மறுபுறம் தேவைப்படும் போது மற்ற விலங்குகளுக்கு உதவவும் செய்யும். அந்தவகையில் சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்று நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த வீடியோவில், ஒரு யானை முதலையின் தாடையிலிருந்து மான் குட்டி ஒன்றை காப்பாற்றுகிறது. இந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகின்றது.

யானை மானின் உயிரைக் காப்பாற்றியது
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு குளம் அருகே யானைகள் கூட்டம் நிற்பதை நாம் காணலாம். அதே சமயம் முதலையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் மான்குட்டியையும் நாம் இங்கே காணலாம். இதில் முதலை மான் குட்டியை கவ்வி அதை கொல்ல முயற்சிக்கிறது, ஆனால் அங்கிருந்த யானை ஒன்று முதலையை உதைத்து அந்த மான் குட்டியை காப்பாற்றிவிடுகிறது. அதன் பின்னர் மான் குட்டி உடனடியாக முதலையிடமிருந்து தப்பித்து அங்கிருந்து பாதுகாப்பான ஒரு இடத்திற்கு சென்றுவிடுகிறது. ஆனால், யானை தொடர்ந்து முதலையை உதைத்ததுடன், பற்களால் குத்தியது.

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

மான், முதலை மற்றும் யானையின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:

யானையின் செயலை அனைவரும் பாராட்டிள்ளனர்
இந்த வைரல் வீடியோவை, இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்: மேலும் அதில் அவர், "அவர்களால் அன்பாக இருக்க முடிந்தால், நம்மால் ஏன் முடியாது"? என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த வீடியோவுக்கு அதிகளவு பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது இந்த வீடியோ. இந்த யானையைப் பாராட்டி பார்வையாளர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதுதவிர யானை மீதும் அன்பை பொழிந்துள்ளனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News