12 ஆண்டுக்கு பிறகு ரிஷபத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

குரு பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.எனினும் இந்த நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் அவை என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 18, 2024, 04:47 PM IST
  • பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
  • உத்தியோகத்தில் இனிவரும் காலம் சிறப்பாகவே இருக்கும்.
  • பணியிடத்தில் கௌரவத்தைப் பெறலாம்.
12 ஆண்டுக்கு பிறகு ரிஷபத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் title=

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 : ஜோதிடத்தின் படி, 9 கிரகங்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு, இருப்பினும், கடவுள்களின் குருவான வியாழனுக்கு மட்டும் இதில் அதனி சிறப்பு உண்டு. ஜோதிட நம்பிக்கையின் படி, பொதுவாக வியாழன் ஒரு சுபமான கிரகமாக மட்டுமே பாரக்கபாபடுகிறது. ஏனெனில் வியாழன் பொதுவாக செல்வம், சொத்து, மரியாதை அதிர்ஷ்டம் மற்றும் திருமணத்தின் காரணியான கிரகமாக கருதப்படுகிறது. அதேசயம் தனுசு மற்றும் மீன ராசியை ஆளும் கிரகமாக குரு கருதப்படுகிறார் மற்றும் குரு கடகத்தில் உச்சமாகவும், மகரத்தில் நீச்சமாவும் இருப்பார். பொதுவாக குரு ஒரே ராசியில் சுமார் 12 மாதங்கள் வசித்து பின்னர் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதனால், அதான் குரு பெயர்ச்சி அதே ராசியில் பெயர்ச்சி அடைய சுமார் 12 ஆண்டுகள் எடுத்துககொள்கிறது. இந்த வியாழனால் ஏற்படும் மாற்றம் அணைதகு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்நிலையில் தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் விழாயன் வருகிற மே 01, 2024 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மீண்டும் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.எனினும் இந்த நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் அவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!

மேஷம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதேபோல் குரு உங்களது இரண்டாவது வீட்டில் இருந்து வெளியேறி ஆறாம், எட்டாவது மற்றும் பத்தாம் வீட்டைப் பார்ப்பார். இதநாள் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இனிவரும் காலம் சிறப்பாகவே இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி நடக்கப் போவதால் புதிய பொறுப்பைப் பெறலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி அடைவது திடீர் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். பல இடங்களில் இருந்து நிதி ஆதாயம் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் கௌரவத்தைப் பெறலாம்.

கடகம்: குரு கடக ராசியின் 11வது வீட்டில் பெயர்ச்சியடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், கடக ராசிக்காரர்களுக்கு லாப வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், வெற்றி உங்களை தேடி வரும். பொருள் ஆசைகள் நிறைவேறும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News