சிம்மத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.. குடும்பத்தில் மகிழ்ச்சி

Mangal Gochar: செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 11, 2023, 02:13 PM IST
  • செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் நன்மை தரும்.
  • ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.
சிம்மத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.. குடும்பத்தில் மகிழ்ச்சி title=

செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. ராசி மட்டுமல்லாமல், கிரகங்களின் இயக்கங்களும், உதய, அஸ்தமன நிலைகளும் அவ்வப்போது மாறுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரிகின்றன.

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கிரகங்களை போலவே செவ்வாய் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் நெருப்பு உறுப்பு ராசியான சிம்மத்திற்குள் நுழைவது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. 

செவ்வாய் கிரகம் ஜூலை 1, 2023 அன்று பெயர்ச்சியானது. நிலம், சொத்து, தைரியம் மற்றும் பலம் ஆகியவற்றைக் கொடுக்கும் செவ்வாய் கிரகம் சிம்ம ராசியில் நுழைந்துள்ளது. செவ்வாய் கிரகம் சிம்மத்தில் பெயர்ச்சியானது பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. செவ்வாய் ஆகஸ்ட் 17, 2023 வரை சிம்மத்தில் இருக்கும். இதனால் அடுத்த 36 நாட்களுக்கு 12 ராசிகளிலும் செவ்வாய் பெயர்ச்சியின் பலன்கள் இருக்கும். செவ்வாயின் மாற்றத்தால் சிலருக்கு சுப பலன்களும், சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். 

செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. இவர்களுக்கு செவ்வாயின் இந்த மாற்றம் மிக சுபமாக அமையப் போகிறது. இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் நினைத்த அனைத்தும் நடந்துமுடியும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிகப்படியான பலன்களை அள்ளித் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளல்லாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும்

மிதுன ராசி:

செவ்வாய்ப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களின் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். இதன் காரணமாக இந்த வேளையில் ஒன்றன் பின் ஒன்றாக பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். ரியல் எஸ்டேட், சொத்து சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | சூரியனின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு ஆடி மாதம் அட்டகாசமாய் இருக்கும்!

தனுசு ராசி: 

செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் நன்மை தரும். ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். குறிப்பாக தங்களுடைய வியாபாரத்தை வெளிநாடுகளில் பரப்பி தொழில் செய்பவர்களுக்கு தற்போது பெரிய அளவிலான லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். இப்போது பெரிய ஒப்பந்தங்களை இறுதி செய்யலாம். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நீங்கள் இந்த வேளையில் செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றியடையும்.

மீன ராசி:

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் அனுகூலமான பலன்களைத் தரும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் கிடைக்கும் என காத்திருந்த அந்த பதவி, பணம், கௌரவம் கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். யாராலும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. வெளிநாட்டு பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான நற்பலன்கள் ஏற்படும். நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ர சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகள், அமோகமான வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News