சிம்மத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. அமோகமான பண வரவு

Mangal Gochar 2023 Effect: சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நிதி மற்றும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2023, 02:04 PM IST
  • செவ்வாய் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள், வியாபாரிகள் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.
  • இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. அமோகமான பண வரவு title=

செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. சில கிரகங்கள் மிக விரைவாகவும், சில கிரகங்கள் மிக மெதுவாகவும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் மட்டுமின்றி, கிரகங்களின் இயக்கங்கள், உதய மற்றும் அஸ்தமன நிலைகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கிராங்களின் அனைத்து மாற்றங்களின் தாக்கங்களும் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 

ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதமும் பல கிரகங்கள் தங்கள் ராசிகளையும், இயக்கங்களையும் மாற்றும். ஜூலை 1 ஆம் தேதி, கிரகங்களின் தளபதியான செவ்வாய் தன் ராசியை மாற்றினார். அவர் இடம் பெயர்ந்து சிம்மத்திற்கு மாறினார். 

செவ்வாய் கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கிரகங்களை போலவே செவ்வாய் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் நெருப்பு உறுப்பு ராசியான சிம்மத்திற்குள் நுழைவது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதுவும், சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நிதி மற்றும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த ராசிகளில் செவ்வாய் பெயர்ச்சியால் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்: 

மிதுன ராசி

செவ்வாய் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், மிதுன ராசியின் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சி நடக்கிறது. இதன் காரணமாக பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் பெரிய அளவில் சாதிப்பீர்கள். இந்த காலத்தில் பண வரவு நன்றாக இருக்கும். உங்கள் முன்னேற்றம் மிக வேகமாக இருக்கும். ஆனால், இப்போது மிக கவனத்துடன் நீங்கள் முன்னேற வேண்டும். 

உடல்நலம் தொடர்பான விஷயங்களிலும் உங்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில், சொந்த தொழில் செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு பம்பர் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். சிவன் வழிபாடு நன்மை தரும்.

மேலும் படிக்க | வக்ர சனி: நவம்பர் 4 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், பண மழையில் நனைவார்கள்

சிம்ம ராசி

சிம்ம ராசியில் தான் செவ்வாயின் பெயர்ச்சி நடந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே போராடி வரும் உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தற்போது நிவாரணம் காண்பீர்கள். தொழில், வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிக லாபம் கிடைக்கும். 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நல்ல உறவைப் பேணும் நேரமாக இது இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவதால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

துலாம் ராசி

செவ்வாய் துலாம் ராசிக்கு 11 ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்நேரத்தில் நிவாரணம் கிடைக்கும். 

சொந்த தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். எனினும், கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. பரிகாரமாக, விநாயகரை வணங்கு பூஜிப்பது நல்லது. 

தனுசு ராசி

செவ்வாய் தனுசு ராசிக்கு 9 ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அதாவது இந்த ராசிக்கு அதிஷ்ட ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பார். இந்த ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், வியாபாரிகள் புதிய பொறுப்புகளைப் பெறலாம். இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார விஷயங்களிலும், இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். 

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது நன்மை தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நவம்பர் 4 வரை இந்த ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், வருமானம் கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News