குரு வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், வீட்டில் பண மழை

Jupiter Retrograde 2023: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் மற்றும் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் கோடிஸ்வர யோகம் உண்டாகும். அந்தவகையில் மேஷ ராசியில் குரு பெயர்ச்சி அடைந்து தற்போது பயணித்து வருகிறார். இதனிடையே குரு பகவான் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இந்த நான்கு மாதம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் எப்படிப் பட்ட பலனைத் தருவார் என்பதை பார்ப்போம்.

1 /13

மேஷம்: உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நினைத்த காரியம் கைகூடி வரும். புது வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

2 /13

ரிஷபம்: அலுவலத்தில் உங்கள் செயல்பாட்டிற்கு மதிப்பு மரியாதை இல்லையே என்று கவலைப்பட்டு வந்தீர்கள். இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். 

3 /13

மிதுனம்: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் தேடி வரும். 

4 /13

கடகம்: வீண் அலைச்சல் வரும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோபமாக பேசி அவமானங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் நடைபெறும் விசயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் நிலை மோசமாகும். 

5 /13

சிம்மம்: தள்ளிப் போன சுப காரியங்கள் மள மளவென முடியும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும், உங்கள் வீட்டில் பண மழைதான். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். அலுவலகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

6 /13

கன்னி: குடும்பத்தில் உறவினர்களிடையே நிமிர்ந்து சண்டை போடுவதை விட கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் - மனைவிக்குள் தேவையற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். மேலதிகாரி இனி உங்கள் திறமையை அங்கீகரிப்பர். எதிர்பார்த்த பதவியுயர்வு தேடி வரும்.

7 /13

துலாம்: குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனதில் தெளிவு பிறக்கம். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். 

8 /13

விருச்சிகம்: குரு பகவான் வக்ர கதியில் பயணம் செய்ய இருப்பதால் உங்களின் புத்திக்கூர்மை அதிகமாகும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு வீடு வண்டி வாகன யோகம் கிடைக்கும். 

9 /13

தனுசு: அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரு பகவானின் பார்வை தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். 

10 /13

மகரம்: குருபகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகும் காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு எதிலும் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் மிகுந்த ஜாக்கிறட்டையுடன் இருக்க வேண்டும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

11 /13

கும்பம்: கும்பம் ராசிக்காரர்களுக்கு வக்ர குரு பெயர்ச்சி திடீர் செலவுகளை அதிகரிக்கச் செய்வார். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். செல்வ வளம் கூடும் கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்கள் எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வேலை செய்யும் இடங்களில் பளு கூடும் என்றாலும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள்.

13 /13

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.