கும்பத்தில் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்...வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Sun Transit: கும்பத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளில் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2024, 11:47 AM IST
  • கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.
  • சூரியன் அருள் காரணமாக நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பத்தில் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்...வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயற்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் அரசன் என்று அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியையும் மாற்றுகிறார். 

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான இடத்தில் இருந்தால் அந்த நம்பர் வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுகிறார். இந்த மாதம் இன்று, அதாவது பிப்ரவரி 13 ஆம் ஆம் தேதி மதியம் 3:31 மணிக்கு சூரியன் தனது ராசியை மாற்றவுள்ளார். சூரியன் தற்போது சனியின் ராசியான கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். கும்பத்தில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளில் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

கும்ப ராசியில் சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை கொண்டு வரும். சூரியன் உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பார். புதிய பணிகளை தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். சூரியனின் அருளால் உங்கள் ஆளுமையால் உங்களை சுற்றி இருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்குள் மறைந்துள்ள திறமை இந்த காலத்தில் உங்கள் புகழை அதிகரிக்கும். சூரியனின் அருளால் உங்கள் பணியிடத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவீர்கள். பதிவு உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணி பாராட்டப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

மேலும் படிக்க | குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

ரிஷபம் (Taurus)

கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும். சூரியன் அருள் காரணமாக நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பல ஏற்றங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது அபரிமிதமான லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் தலைமைத்துவ பண்புகள் பிரகாசிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் (Libra)

சூரியனின் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை கொண்டு வரும். இவர்களது படைப்பாற்றல் திறன் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். இந்த காலத்தில் சூரியன் அருளால் உங்களுக்கு பலவித நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் பல புதிய உச்சங்களை தொடலாம். இந்த காலத்தில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பண வரவு அதிகமாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான பண வரவு, லாபம், ஆடம்பர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News