நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்

Monthly Horoscope November 2022:  நவம்பரில், சிலர் தொழில்-வியாபாரத்தில் வலுவான வெற்றியைப் பெறுவார்கள். பண வரவு சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2022, 10:32 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
  • இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும்.
நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்  title=

நவம்பர் மாத ராசி பலன்: நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் ராசிகள் மற்றும் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதம் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் இவர்களுக்கு பல நன்மைகளை தரும். நவம்பரில், சிலர் தொழில்-வியாபாரத்தில் வலுவான வெற்றியைப் பெறுவார்கள். பண வரவு சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். நவம்பர் மாதத்திற்கான அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நவம்பரில் இந்த ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்ட தேவதையின் அருள் மழை பொழியும்

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பரில் நிதி ஆதாயம் கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன. பட்ஜெட் போட்டு செலவு செய்தால் இந்த மாதம் அதிகமாக சேமிக்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த வெளிநாட்டு பயணத்தால் பண ஆதாயங்களும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களின் வருமானம் நவம்பரில் உயரும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். நிதி பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். மனதில் அமைதியும் நிம்மதியும் இருக்கும்.

மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தியும் செவ்வாயின் வக்ர கதியும் இந்த 4 ராசிகளுக்கு அருமை! 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். வருமானம் அதிகரிக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வீட்டில் உள்ள அனைவருடனும் உறவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி: 

நவம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பணத்தால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நன்மை இருக்கும். 

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம் இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். அமைதியான சூழல் நிலவும். 

மகரம்: 

நவம்பரில் மகர ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும். இதனால் நிதி நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு பல வித லாபங்கள் கிடைக்கும். இது முதலீடு செய்ய ஏற்ற மாதமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகளால் எதிர்கலாத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்; சில எளிய பரிகாரங்கள்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News