நவம்பர் மாத கிரக மாற்றங்கள், ராசிகளில் அவற்றின் தாக்கம்: புதிய மாதமான நவம்பர் மாதம் நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த மாதம் ஐந்து முக்கிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவம்பரில் ஏற்படும் கிரக மாற்றங்களும் ராசிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். நவம்பர் மாத கிரக மாற்றங்களால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
நவம்பரில் எந்த கிரகம் எப்போது மாறுகின்றது:
நவம்பர் மாதத்தில், ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி மேஷ ராசியில் நிகழும். நவம்பர் 11ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். நவம்பர் 13 ஆம் தேதி, செவ்வாய் வக்ர நிலையில், மிதுனத்திலிருந்து ரிஷப ராசியில் நுழைகிறார். நவம்பர் 13ஆம் தேதி புதனும் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நவம்பர் 16 அன்று, சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். நவம்பர் 24 அன்று, குருபகவான வியாழன் மீனத்தில் வக்ர நிவர்த்தி அடைவார்.
இந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள்:
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியின் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு மகாபுருஷ ராஜயோகம்: பணமும் புகழும் சேரும்
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பண வரவுகள் அதிகரிக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபர்த்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நன்மைகளை அள்ளித் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அனுகூலமான பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தால் ஆதரிக்கப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகள் நிறைவேறும். இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.
மேலும் படிக்க | விருச்சிகத்தில் புதன்-சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ