டிசம்பரில் உங்கள் ராசிக்கு எந்த நாள் நல்ல நாளாக இருக்கும்? வாங்க பார்க்கலாம்!

December 2023 Horoscope: உங்களது ராசியின் படி, வரும் டிசம்பர் மாதத்தில் எந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்? வாங்க பார்க்கலாம்.

Written by - Yuvashree | Last Updated : Nov 20, 2023, 07:31 PM IST
  • டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது.
  • இதில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு நாள் அதிர்ஷ்ட நாளாக உள்ளது.
  • உங்கள் ராசிக்கு எந்த நாள் நல்ல நாள் தெரியுமா?
டிசம்பரில் உங்கள் ராசிக்கு எந்த நாள் நல்ல நாளாக இருக்கும்? வாங்க பார்க்கலாம்! title=

ஒவ்வொரு ராசிக்கும், அவரவரின் கிரக பலன்களின் படி, ஒவ்வொரு நாள் நல்ல நாளாக அமையும். இருக்கும் 12 ராசிகளுக்குமே ஒவ்வொரு மாத்திலும் முக்கியமான நாள் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு சில ராசிகளுக்கு ஒரே நாள் நல்ல நாளாக இருக்கலாம். ஒரு சிலருக்கு வெவ்வேறு நாட்கள் நல்ல நாட்களாக அமையும். இது, அந்ததந்த நாளில் ஏற்படும் ஜாதக கட்டங்களை பொருத்து அமையும். அந்த நாளில் ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால் அது கண்டிப்பாக வெற்றியில் முடியும்  என நம்பப்படுகிறது. உங்கள் ராசிக்கு, வரும் டிசம்பர் மாதத்தில் உங்கள் ராசிக்கு எந்த நாள் அமோகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க. 

1.மேஷம்:

டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை அடிக்க இருக்கிறது. குறிப்பாக டிசம்பர் 5ஆம் தேதி இவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய மாற்றம் நடக்க உள்ளது. இந்த நாளில் பலர் கண்படும் வகையில் ஜொலிக்க இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் இவர்கள் எடுத்து வைக்கும் அடிகள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும். தொழில்முறை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்களுக்கு சில மாறுதல்கள் ஏற்படலாம். 

2.ரிஷபம்:

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் ஒரு நிலையான முடிவை எடுக்கும் நிலையும் வரலாம். இந்த மாதத்தில் அதிர்ஷ்டம், செல்வம் போன்ற அனைத்தும் வாசல் கதவை தட்ட உள்ளன. எந்த அடியை எடுத்து வைத்தாலும் கவனம் முக்கியம். எதிர்பாராத வகையில் சில வெகுமதிகள் வந்து சேரலாம். 

3.மிதுனம்:

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அதிர்ஷ்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு பேச்சுத்திறன் பெருக வாய்ப்புள்ளது. சொல்ல விரும்பும் கருத்தை தெளிவாக கூறி விடுவது நல்லது. சமூக மாற்றங்களும் வேலை ரீதியான தொடர்புகளும் பெருகலாம். 

4.கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் காதல் மழையடிக்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக இதற்கு தோதுவான நாளாக இருப்பது டிசம்பர் 20ஆம் தேதி. இந்த நாளில் உங்களுக்கு உணர்வு ரீதியாக நெருக்கம் ஏற்படலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வீர்கள். 

மேலும் படிக்க | உலகையே ஆளப்பிறந்த ‘அந்த’ 5 ராசிக்காரர்கள்..! யார் யார் தெரியுமா?

5.சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 25ஆம் தேதி நல்ல நாளாக அமையும். தனிப்பட்ட முறையில் மென்மேலும் சிறந்து வளர இந்த நாள் துணை புரியும். அதனால், உங்கள் விடா முயற்சிகளை மட்டும் மேற்கொண்டு, வெற்றி உங்களை தேடி வரும் போது வாரி அணைத்துக்கொள்ளுங்கள். 

6.கன்னி:

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் பெரிய அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 8ஆம் தேதி பல இடங்களில் உங்களுக்கு நல்ல முறையில் அங்கீகாரம் கிடைக்கும். உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் கவனம் கொடுக்கவும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை நோக்கி நகர்வது மிகவும் முக்கியம். 

7.துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் கேட்கும் விஷயங்கள், நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் நாளாக உள்ளது, டிசம்பர். குறிப்பாக அந்த மாதத்தின் 17ஆம் தேதி மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இந்த நாளில் பிரிந்த உறவுகளும் ஒன்று சேரலாம். 

8.விருச்சிகம்:

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் படைப்பாற்றலை வளர்க்க உதவும். குறிப்பாக உங்கள் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நல்ல நாளாக டிசம்பர் 14ஆம் தேதி பார்க்கப்படுகிறது. அந்த நாளில் உங்கள் கலைத்துறை சார்ந்து எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விட வேண்டாம். 

9.தனுசு:

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் புதுப்புது நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. சொல்லப்போனால், இது அவர்களுக்கு சாகசம் நிறைந்த நாளாக இருக்கும். குறிப்பாக டிசம்பர் 9ஆம் தேதி உங்கள் அதிர்ஷ்டத்திற்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. புதிதாக வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

10.மகரம்:

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது. உங்கள் கிரக பலன்களின்படி உங்களுக்கு பிடித்த காரியங்களை செய்ய இந்த மாதம் உகந்தது. 

11.கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் தனித்துவம் நிறைந்த மாதமாக வரும் டிசம்பர் மாதம் இருக்க போகிறது. குறிப்பாக கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக டிசம்பர் 12ஆம் தேதி பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் உங்களுக்கு பிடித்த கலைநயம் மிக்க வேலைகளை செய்யலாம். இது, உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். 

12.மீனம்:

தன் உள்ளுணர்வை எப்போதும் நம்பும் மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. குறிப்பாக அம்மாதத்தின் 18ஆம் தேதி உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. உங்கள் உள்ளுணர்வை எப்போதும் நம்பிக்கொண்டே இருங்கள். அது, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு உங்களை கொண்டுபோய் சேர்த்து விடும். 

மேலும் படிக்க | Rasipalan Today: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News