அட்டகாசமான நற்பலன்கள்: சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Venus Transit: சில ராசிக்காரர்கள் அதிகபப்டியான நற்பலன்களை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2023, 08:26 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.
  • இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் பல சாதகமான நன்மைகள் நடக்கும்.
அட்டகாசமான நற்பலன்கள்: சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும் title=

சுக்கிரன் ராசி மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் கோள்களின் பெயர்ச்சி என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். இங்கே பெயர்ச்சி என்பது கிரகத்தின் இயக்கத்தை நேரடியாகக் குறிக்கிறது. ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் (ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வது) பெயர்ச்சி எனப்படும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகியவை ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள். இந்த பெயர்ச்சிகளில் கிரகங்கள் தங்கள் வேகத்திற்கு ஏற்ப அவ்வப்போது ராசிகளை மாற்றுகின்றன. 

கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சூரியன் முதல் கேது வரை அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கால அளவில் நடக்கின்றன. 

சுக்கிரன் பெயர்ச்சி

ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுக்கிரன் கடகத்தில் பெயர்ச்சியானார். கடகத்தில் பெயர்ச்சியான பிறகு ஆகஸ்ட் 18, அதாவது இரு நாட்களுக்கு முன்னர் அவர் இரவு 7.17 மணிக்கு கடக ராசியிலேயே உதயமாகியுள்ளார். சுக்கிரன் உதயத்தால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.

ராசிகளில் தாக்கம்

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கிரகத்தின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்கள் அதிகபப்டியான நற்பலன்களை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் பல சாதகமான நன்மைகள் நடக்கும். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும், பதற்றம் குறையும். இத்துடன் மனதின் பயமும் நீங்கும். பல சிரமங்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். 

மேலும் படிக்க | அமோக பண வரவு, பம்பர் லாபம்: வியாபாரத்தில் வெளுத்து வாங்கும் ராசிகள் இவைதான்!!

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் வேலையில் நல்ல பன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். இந்த நேரம் படிப்பு அல்லது உயர்கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், இப்போது உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

சிம்ம ராசி

சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் அழகாக மாறும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

சுக்கிரன் சஞ்சாரம் மகர ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்பை தரப்போகிறது. இப்போது வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. சுகபோகங்கள் பெருகும், பணவரவும் கூடும். சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்காலத்திற்காக இந்த வேளையில் நல்ல திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் மரியாதையும் அதிகரிக்கும். வணிகத்திற்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். ஆனால் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | செவ்வாய் வந்துவிட்டார்.. உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்கள் நீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News