செவ்வாய் வந்துவிட்டார்.. உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்கள் நீங்களா?

Mars Transit: ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகத்தின் அதிபதி கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த சஞ்சாரத்தின் சுப பலன்கள் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும். அரசன் செல்வம் யாருக்கு கிடைக்கும்? 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2023, 04:43 PM IST
  • மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
  • ரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம்.
  • உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் நீங்கள் முன்னேறுவீர்கள்.
செவ்வாய் வந்துவிட்டார்.. உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்கள் நீங்களா? title=

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2023: கிரகங்களின் தளபதியான செவ்வாய், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னிக்கு பெயர்ச்சி அடைந்தார், அதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும், இப்போது துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்துக்கொள்வோம்.

துலாம் - செவ்வாய் 2 ஆம் மற்றும் 7 ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், 12 ஆம் வீட்டை ஆக்கிரமித்துள்ளார். இதனால் தடைபட்ட வேலைகள் முடிவடைவதோடு பொருளாதார ரீதியாகவும் பலம் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறலாம். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். ஆனால் சூழ்நிலையை சமாளித்து விடுவீர்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் வெளிநாட்டில் கல்வி கற்க பெயர்ச்சி பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பணத்தை முதலீடு செய்வது கவனமாக செய்யப்பட வேண்டும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | சுபிட்சம், மகிழ்ச்சி: சுக்கிரன் உதயத்தால் உருவாகும் கஜலட்சுமி யோகம்.. இந்த ராசிகளுக்கு உச்சகட்ட வெற்றி

விருச்சிகம்- முதலாம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக செவ்வாய் 11 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். இதனால் செலவுகள் அதிகரிக்கும். வேலையை முடிக்க வழக்கத்தை விட அதிகமாக ஓட வேண்டியிருக்கும். தொழில் மற்றும் நிதித் துறைகள் குறிப்பாக சவாலானதாக இருக்கும். நண்பர்களுடன் உங்களுக்கு மோதல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தேவைப்படும். இருப்பினும், இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் புரிதலும் பொறுமையும் மட்டுமே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு- 5 ஆம் மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். இந்தக் காலத்தில் மாணவர்களிடம் தேவையற்ற கோபம், ஆவேசம் கொள்வீர்கள். தொழில் மற்றும் பொது நற்பெயர் தொடர்பான விஷயங்களில் உங்கள் மனம் இருக்கும். வீட்டில் குழப்பமான சூழல் இருக்கலாம், எனவே உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் நேரத்தை அனுபவிப்பார்கள், வியாபாரத்தில் அபாயகரமான புதிய ஸ்டார்ட்அப்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது சரியானது. திருமணம் தொடர்பான விஷயங்களில் சில தடைகள் வரலாம்.

மகரம்- 4 ஆம் மற்றும் 11 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 9 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். வியாபாரத்தில் பழைய திட்டத்தை மீண்டும் தொடங்க திட்டமிடுவீர்கள். மாணவர்களே, உங்கள் படிப்பில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஆர்வமுள்ளவராகவும் இருப்பீர்கள். பணியிடத்தில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படும். அர்த்தமுள்ள மற்றும் சுவாரஸ்யமான உறவுகளும் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பதற்றம் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் எதைச் செய்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் நீங்கள் முன்னேறுவீர்கள்.

கும்பம்- செவ்வாய் 3 ஆம் மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 8 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். பணியிடத்தில் உங்கள் பலத்தை தவறாகக் கணக்கிடுவது உங்களுக்குச் சிக்கல்களை உருவாக்கும். பயணங்களில் அதிக செலவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது காயங்களில் இருந்து காப்பாறப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம்.

மீனம்- செவ்வாய் இரண்டாவது மற்றும் 9 ஆம் வீட்டிற்கு அதிபதி மற்றும் 7 ஆம் வீட்டை ஆக்கிரமித்துள்ளார். உங்கள் கோபம் வாழ்க்கைத் துணையின் மீது இறங்கக்கூடும், எனவே இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் மீது கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். செவ்வாயின் பெயர்ச்சி காரணமாக பணியிடத்தில் தலைமைத்துவ வாய்ப்பை இழக்கக்கூடும். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கடகத்தில் சுக்கிரன்... இந்த 4 ராசிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது - கிடைக்கும் பம்பர் பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News