குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் இவர்களுக்கு கோடீஸ்வர யோகம்

Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரருக்கு என்று பிடித்தமான சில ராசிகள் உள்ளன. இவர்கள் மீது குபேரர் சிறப்பு அருளைப் பொழிகிறார். இவர்கள் அதிக உழைப்பு இல்லாமலேயே தேவையான பலன்களை பெற்று விடுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2024, 11:54 PM IST
  • துலா ராசிக்காரர்கள் மீது எப்போதும் குபேரரின் ஆசிர்வாதம் இருக்கும்.
  • இவர்களது வாழ்நாள் முழுவதும் பணத்திற்கான குறை இருக்காது.
  • இவர்கள் எடுக்கும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்கிறார்கள்.
குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் title=

Favourite Zodiac Signs of Lord Kuber: மனித வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது. இந்து சாஸ்திரப்படி லட்சுமி அன்னை செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறார். அதேபோல் குபேரரும் செல்வங்களை அள்ளித்தரும் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அன்னை லட்சுமியையும் குபேரரையும் சேர்த்து வணங்கினால் நம் வாழ்வில் எப்போதும் செல்வத்திற்கு குறை இருக்காது. 

ஒவ்வொரு ராசியினருக்கும் பிரத்தியேகமாக சில குணாதிசயங்கள் இருக்கும். ராசிகளின் விருப்பு வெறுப்புகள், ஆசைகள், குணங்கள், தேவைகள் என இவை எல்லாம் மாறுபடும். சிலர் மிக அறிவாளிகளாக இருப்பார்கள், இந்த ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பில் திளைப்பார்கள். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படாது.

பொதுவாக லட்சுமி அன்னை மற்றும் குபேரரை (Lord Kuber) வணங்குபவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அனைவர் மீதும் இவர்களது ஆசி பாரபட்சமில்லாமல் இருக்கும் என்றாலும் குபேரருக்கு என்று பிடித்தமான சில ராசிகளும் உள்ளன. இவர்கள் மீது குபேரர் சிறப்பு அருளைப் பொழிகிறார். இவர்கள் அதிக உழைப்பு இல்லாமலேயே தேவையான பலன்களை பெற்று விடுகிறார்கள். பெரும் அதிர்ஷ்டசாலிகளான இவர்களுக்கு வாழ்நாள் முழுதும் குறை இல்லாமல் பண வரவு இருக்கும். குபேரரின் விசேஷ அருள் பெற்ற அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்கள் மீது எப்போதும் குபேரரின் ஆசிர்வாதம் இருக்கும். இவர்களது வாழ்நாள் முழுவதும் பணத்திற்கான குறை இருக்காது. இவர்கள் எடுக்கும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்கிறார்கள். இவர்களுடைய பொருளாதார நிலை எப்போதும் திடமாக இருக்கும். வீட்டில் எப்போதும் பண வரவு இருக்கும். கூடுதலாக இவர்களது திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவர்களுக்கு எப்போதும் மனதில் ஒரு துள்ளலும், செயலில் உற்சாகமும், வாழ்வில் நாட்டமும் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... பண வரவு, லாபம் அதிகரிக்கும்

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்கள் மிக விரைவில் வெற்றியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் அதிகம் உழைக்க வேண்டிய தேவை இருக்காது. இவர்கள் மீது குபேரரின் அருள் இருக்கும். சமூகத்தில் இவர்களுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் இருக்கும். இவர்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும். இவர்கள் தங்கள் வாழ்வில் பிரச்சனை வந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி காணாமல் ஓய மாட்டார்கள். மன திடத்துடன் எதிர்த்து போராடி வெற்றி காண்பார்கள். ஆகையால் இவர்கள் வாழ்க்கை பல சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். 

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்கள் எந்த வேலையில் கை வைக்கிறார்களோ அந்த வேலை வெற்றிகரமாக நடந்து முடியும். புதிய வர்த்தகத்தை தொடங்கினாலும் இவர்கள் அதில் அதிகப்படியான லாபம் காண்பார்கள். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. வாழ்வில் இவர்கள் பெரிய உச்சங்களை தொடுவார்கள். வணிகர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். பிறருக்கு உதவி செய்வதில் கடக ராசிக்காரர்களை மிஞ்ச யாரும் இல்லை. இதனால், இவர்கள் எண்ணத்தை புரிந்து குபேரரும் இவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவார்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன்: செல்வம் பெருகும், அளப்பரிய பலன்கள் அனுபவிக்க போகும் ராசிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News