மார்ச் மாத ராசிபலன்: செல்வம் பெருகும், அளப்பரிய பலன்கள் அனுபவிக்க போகும் ராசிகள் இவைதான்

March 2024 Planetary Transits: வருகிற மார்ச் மாதம் பல கிரகங்களின் தங்களின் ராசியை மாற்றப் போகின்றது. இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2024, 04:54 PM IST
  • மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைவார்.
  • மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
  • எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்?
மார்ச் மாத ராசிபலன்: செல்வம் பெருகும், அளப்பரிய பலன்கள் அனுபவிக்க போகும் ராசிகள் இவைதான் title=

மார்ச் மாத ராசிபலன் 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாகும். அதிலும் வரவிஇருக்கும் மார்ச் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மார்ச் மாதம், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரங்களின் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படப் போகிறது.

இந்நிலையில் வருகிற மார்ச் 7 ஆம் தேதி 2024 கிரகங்களின் அதிபதியான புதன் கிரகம் கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். மீண்டும் மார்ச் 26 ஆம் தேதி புதன் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைவார். அதன்பின் மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைவார். 
இதையடுத்து, வரும் மார்ச் 31 ஆம் தேதி செல்வம், செழிப்பை அளிக்கும் சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் தற்போது சில சுப யோகங்களும் உருவாகப் போகிறது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட 4 பெரிய கிரகங்களின் பெயர்ச்சியால், எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: மார்ச் மாதம் மேஷ ராசியைக் கொண்ட மாணவர்கள் தேர்வில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த நீண்ட நாட்கள் பணிகள் முழுமையாக நிறைவடையும், வெற்றி பெறும். பொருளாதார நிலையில் உயர்வு இருக்கும். சுப காரியங்களால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முழுமையாம் முன்னேற்றம் அடைவார்கள். தொழில் பண வரவு உண்டாகும். ஆசிரியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் இன்பம் இருக்கும். நிதி நிலை மேம்படும்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2024... ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!

கடகம்: புதிய வருமானம் வரும். இதனால் நிதி ஆதாயம் உண்டாகும். நீதிமன்ற வழக்கில் உங்களுக்கு ஆதரவாக தீர்வு வரும், வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். பணம், சொத்துக்களால் இருந்து வந்த சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மன அமைதியும், வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்றவை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு ஏற்படும். 

கன்னி: சமய நிகழ்ச்சிகளில் அதீத ஆர்வம் ஏற்படும். ஆளுங்கட்சியில் இருந்து நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் மேல்லோங்கும். அலுவலகத்தில் உங்களின் பணியால் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி அடைந்து வருமானம் பெருகும். 

மகரம்: மகர ராசியினரின் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும், உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: அதிர்ஷ்டம், பண வரவு.... மகிழ்ச்சி உச்சம் இந்த ராசிகளுக்கு தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News