தின பலன் - துலாம் முதல் மீனம் வரை; வேலையில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

இன்றைய ராசிபலனில் (31 ஆகஸ்ட் 2022) துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 30, 2022, 09:09 PM IST
  • வியாபாரத்தில் நஷ்டம் வரலாம், இதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • கொடுக்கல் வாங்கல்களை கவனமாக செய்தால் நல்லது.
  • உயர்கல்வி விஷயத்தில் இளைஞர்களுக்கு தடைகள் வரலாம்.
தின பலன் - துலாம் முதல் மீனம் வரை;  வேலையில் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்! title=

இன்றைய ராசிபலனில் (31 ஆகஸ்ட் 2022) துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு மேலதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் சுமூகமான உறவுகள் இருக்கும், பணிபுரியும் இடத்தில் அதற்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் இன்று வியாபாரத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் சிறிய தவறு பிரச்சனைக்கு காரணமாகிவிடும். இளைஞர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கும். சில நேரங்களில் நீண்ட கால நலன் கருதி அவ்வாறு செய்வது அவசியமாகிறது. மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும். ஏதேனும் காரணத்திற்காக தகராறு நடந்து கொண்டிருந்தால், உடனடியாக அதை சரிசெய்ய முயற்சிக்கவும். காது வலி வரலாம், சிறு குழந்தை இருந்தால், அதன் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி காதில் மருந்து போடாதீர்கள். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் ஏற்படும் தடங்கல்களால் நீங்கள் சிரமப்படுவீர்கள், ஆனால் வருத்தப்படுவதற்குப் பதிலாக, அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்கள் பேச்சில் பணிவு இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் பணி முடியும், இல்லையெனில் பேச்சால் பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நீங்கள் சிறப்பு அன்பைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் குடும்பத்துடன் எங்காவது பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.  தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருங்கள். மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் விரைவில் குணமடையலாம். சமூகப் பொறுப்பை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். பொறுமையையும் கவனத்தையும் கைவிடாதீர்கள்.

தனுசு : இந்த ராசிக்காரர்கள் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சில்லறை வணிகர்களின் விற்பனை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும், வணிகம் நடத்தும் கூட்டு நிறுவனத்தில் லாபம் இருக்கும். இளைஞர்கள் வேலை தேடி ஓட வேண்டியிருக்கும். வேலை கிடைக்கும் வரை இதுபோன்ற கடின உழைப்பை தொடருங்கள். தாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம், அவருக்கு சேவை செய்யுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும். உணவுத்துறையில் உள்ளவர்கள் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்கவும். ஏனெனில் இந்த துறையில், தரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

மகரம்: பணப்பற்றாக்குறையால் மகர ராசிக்காரர்களின்  சில வேலைகள்  தடை விடலாம், பணியில் அலட்சியம் காட்டுவதால் உத்தியோகம் பாதிக்கப்படும். தொழிலதிபர்கள் வணிகத் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் வணிகம் மேலும் வளர்ச்சி அடையும். தோல்விகளை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளவும், அதே போல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும். உங்கள் திறமைக்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவ தயாராக இருங்கள.

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படலாம். ஒருதலைப்பட்ச சிந்தனையைத் தவிர்த்து, மற்றவர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் கலை உங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கும், இது வணிகத்தில் முன்னேற ஒரு பயனுள்ள சூத்திரம். மாணவர்கள் படிப்புக்கும் பொழுதுபோக்கிற்கும் இடையே சமநிலையை பேண வேண்டும், படிப்பதே முக்கிய நோக்கம், மனம் சலிப்படையும்போது, ​​கொஞ்சம் பொழுதுபோக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அவர்கள் கோபப்பட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள், இல்லையெனில் தகராறு ஏற்படலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சிரமப்பட்டுக் கொண்டிருந்த வாழ்வாதாரத்திற்கான புதிய ஆதாரங்களைப் பெறுவார்கள். எனினும் வியாபாரத்தில் நஷ்டம் வரலாம், இதில் கவனமாக இருக்க வேண்டும், கொடுக்கல் வாங்கல்களை கவனமாக செய்தால் நல்லது. உயர்கல்வி விஷயத்தில் இளைஞர்களுக்கு தடைகள் வரலாம். பயப்படாமல் பொறுமையுடன் செயல்படுங்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரையும் மதித்து, இளையவர்களிடம் பாசத்துடன் நடந்து  நல்ல சூழலை உருவாக்குங்கள். பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகரிக்கலாம், அவர்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News