சதயத்தில் சனி பகவான்... அடுத்த 6 மாதங்களும் கடினம் தான் - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

Shani Nakshatra Peyarchi 2023: சனி பகவான் வரும் அக். 17ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்தில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி எதிர்மறையான விளைவை சில ராசிகளுக்கு ஏற்படுத்த உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Apr 26, 2023, 05:24 PM IST
  • கடந்த மார்ச் 15ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் நுழைந்தது.
  • அடுத்த 6 மாதம் அவர்களுக்கு சிக்கலாக இருக்கும்.
  • ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு ஏற்படும்.
சதயத்தில் சனி பகவான்... அடுத்த 6 மாதங்களும் கடினம் தான் - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? title=

Shani Nakshatra Peyarchi 2023: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை மாற்றுகிறது. அதன் விளைவு அனைவரின் மீதும் தாகத்தை விளைவிக்கும். வேத ஜோதிடத்தில் சனி ஒரு பெரிய கிரகமாக கருதப்படுகிறது. 

அவர் எப்பொழுது பெயர்ச்சி ஆனாலும், அதன் விளைவும் பரவலாக இருக்கும். சனி தற்போது கும்ப ராசியில் உள்ளார். கடந்த மார்ச் 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு கருதப்படுகிறார். அவர் அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நட்சத்திர மாற்றம் எதிர்மறையான விளைவை இந்த 3 ராசிகளுக்கு ஏற்படுத்த உள்ளன. அடுத்த 6 மாதங்கள் அவர்களுக்கு மிகவும் சிக்கலான காலகட்டமாக இருக்கும். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் சாதகமாக இருக்காது. இதன் போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு ஏற்படும். எந்த நோயும், மன அழுத்தமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். பணியிடத்தில் எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள். இல்லையெனில் அவர்கள் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன் கவனமாக இருங்கள்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு உடல் நலனில் அதிக கவனம் தேவை, முழு ராசிபலன் இதோ

விருச்சிகம்

சனியின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். பணம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் அசுப பலன்களைத் தரும். இவர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். எந்த முக்கிய வேலையையும் தவிர்க்கவும், தடைகள் இருக்கலாம். பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மே மாதத்தில் நடக்க இருக்கும் 4 கிரக பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News