சனியால் உருவான ராஜயோகம்: 30 மாதங்கள் இந்த ராசிகளுக்கு அமோக வாழ்வு, ஏகப்பட்ட லாபம்

Sani Peyarchi 2023: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. நீதியின் கடவுளான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். கிரகங்களுக்குள் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக அவர் கருதப்படுகிறார்.

ஜனவரி 17, 2023 அன்று, பெயர்ச்சியான சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இப்போது சனி அடுத்த இரண்டரை வருடங்களுக்கு கும்ப ராசியில் இருப்பார். 

1 /8

சனி பகவான் பெயர்ச்சியாகி கும்ப ராசியில் இருக்கும்போது, ஷஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் மூலம் சனி 5 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களை தருவார். 

2 /8

இதற்கிடையில் இந்த காலகட்டத்தில் சனியின் அஸ்தமனம், உதயம் போன்ற மாற்றங்களும் ஏற்படும். சனியுன் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும். சனி பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் எந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக இருந்து அதிகப்படியான பலன்களை அள்ளித்தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

3 /8

சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு தொழிலில் பெரிய வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். மனைவியுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். கலை, எழுத்து, ஊடகம் சார்ந்தவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வெளியூர் பயணம் இருக்கலாம்.  

4 /8

சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் திறக்கும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டம் உடனிருக்கும். பண வரவு இருக்கும். வியாபாரம் காரணமாக நீண்ட பயணம் செல்ல நேரிடும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.  

5 /8

சனி துலாம் ராசிக்காரர்களின் தலைவிதியையும் மாற்றும். இவர்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்னேற்றப் பாதை திறக்கும். வாழ்வில் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

6 /8

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

7 /8

சனி பெயர்ச்சியடைந்து அதன் சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதன் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். கும்பத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருந்தாலும், சனி கும்பத்தின் அதிபதியாக இருப்பதால், இந்த ராசியின் குண்டலியின் லக்ன வீட்டில் ஷஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் உங்களுக்கு முன்னேற்றத்தையும் பண வரவையும் அளிக்கும். உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.