சூரியன் ராசி மாற்றம்: ஜூன் 15 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், வெற்றிகள் குவியும்

Sun Transit: சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 02:10 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும்.
  • தொழிலில் பல நன்மைகள் உண்டாகும்.
  • இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்களின் அனைத்து பணிகளும் பாராட்டப்படும்.
சூரியன் ராசி மாற்றம்: ஜூன் 15 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும்,  வெற்றிகள் குவியும் title=

சூர்ய பெயர்ச்சி ஜூன் 2022: ஜோதிடத்தில் சூரியன் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. சூரியன் ஒரு மாதத்தில் ஒரு முறை ராசியை மாற்றுகிறது. 

சூரிய பகவான் தந்தை, வெற்றி, அரசு வேலை, அரசியல், உடல்நலம், மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது தொழிலில் அதிக வெற்றிகளைப் பெறுகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார், அதிக புகழ் பெறுகிறார். 

தந்தை மற்றும் பெரியவர்களின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் இருக்கும். அதே சமயம், அவர் அச்சமற்றவராகவும், தலைமைத்துவத்தில் முதன்மையானவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட முக்கியமான கிரகமான சூரியன் ஜூன் 15ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.

மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்

கடகம்: 
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். நீதிமன்ற விவகாரங்கள் தீரும். இந்த விவகாரங்களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். 

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை 

எதிரிகள் மீது வெற்றி உண்டாகும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். எனினும், கடக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பெரும் பண ஆதாயத்தைத் தரும். இந்த காலத்தில் உங்களது நிதி நிலை மேம்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவு வருமானம் பெருகும். 

இந்த காலத்தில் உங்கள் சேமிப்பும் நன்றாக இருக்கும். மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு ஏற்படலாம். காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். உறவுகளுக்குள் ஏற்பட்டிருந்த பிளவுகள் இப்போது சரியாகிவிடும். இந்த காலத்தில் பிடிவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. 

கன்னி: 

மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சியாகும் போது கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு பல வழிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் வெற்றி கிடைகும். இது உங்கள் செயல்திறனை மேம்படுத்தும்.

இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்களின் அனைத்து பணிகளும் பாராட்டப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். இந்த நேரத்தை நல்ல வேலைகளில் பயன்படுத்துவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News