சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து: விவரம் இதோ

Shani Vakri 2022: சில ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையும், நிதி நிலையும் மிக சிறப்பாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2022, 11:10 AM IST
  • மேஷம், கன்னி, தனுசு ராசிக்காரர்களின் நேரம் சனியின் இந்த நிலையால் மிகவும் அனுகூலமாக இருக்கும்.
  • ரிஷபம், மிதுனம், துலாம் ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி கலவையான நேரமாக இருக்கும்.
  • கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது.
சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து: விவரம் இதோ title=

சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி பகவான் ஜூன் 5 ஆம் தேதி பிற்போக்கு நகர்வில் பெயர்ச்சியானார். சனியின் பிற்போக்கு இயக்கம் காரணமாக பல ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை உள்ளவர்களுக்கு அதிக பிரச்சனைகள் வரலாம். 

சனி அக்டோபர் மாதம் வரை பிற்போக்கு நிலையில் இருப்பார். இதற்குப் பிறகு அவர் வழக்கமான நகர்வைத் தொடங்குவார். அக்டோபர் 23ல் சனி கும்ப ராசியில் தங்கி அவர் தன் இயல்பான நகர்வை துவங்கும்போது, இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் குறையும். 

எனினும், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த 141 நாட்கள் தொல்லைகள் மிகுந்ததாக இருக்கும். மறுபுறம்,  சனியின் வக்ர பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி மழையாக பெய்ய உள்ளது. குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையும், நிதி நிலையும் மிக சிறப்பாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மகிழ்ச்சியான நாட்களை அனுபவிக்கவுள்ள ராசிகள்

மேஷம், கன்னி, தனுசு ராசிக்காரர்களின் காலம் சனியின் இந்த நிலையால் மிகவும் அனுகூலமாக இருக்கும். இவர்களது ஜாதகத்தில் சனியின் நிலை சரியாக இருந்தால், சனி அவர்களின் வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சியைத் தருவார். 

மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ள இந்த ராசிக்காரர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கும் இது மேன்மையாக காலமாக இருக்கும். புதிய தொழிலை துவங்கும் எண்ணம் உள்ளவர்கள் இந்த வேளையில் அதை செய்யலாம். வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள். புதிய ஒப்பந்தக்காரர்களுடன் இணைப்பு கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளால் பெருமையும் கௌரவமும் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களை அனிபவிப்பீர்கள்.

சுமாரான விளைவுகளை எதிர்கொள்ளவுள்ள ராசிகள்

ரிஷபம், மிதுனம், துலாம் ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி கலவையான நேரமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது. பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வெண்டும். கொடுக்கல் வாங்கலில் அதிகபட்ச கவனம் தேவை. புதிய வணிகங்களை துவக்க இது சரியான நேரம் அல்ல. 

குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். அதிக கோபம், கருத்து வெறுபாடு ஆகியவற்றை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இக்கட்டான நேரம்

சனியின் வக்ர இயக்கமும் சில ராசிகளில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 141 நாட்கள் தொல்லை மிகுந்ததாக இருக்கும். 

நிதி நிலையில் மிகவும் இக்கட்டான காலகட்டமாக இது இருக்கும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் பல மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவுகளுடனும் நண்பர்களுடனும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: நிதி நெருக்கடி, நஷ்டத்தை எதிர்கொள்ளவுள்ள 5 ராசிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News