அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Jupiter transit on April 22: குரு பகவான் அவருக்கிற 22 ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகுவார. மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்யப்போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2023, 01:06 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடைபெறும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சம்பள உயர்வு ஏற்படும்.
  • குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
அட்சய திருதியை நாளில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் title=

ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் பெயர்ச்சியாகவுள்ளார். இந்த ஆண்டு நடக்கவுள்ள மிகப்பெரிய பெயர்ச்சியாக இது இருக்கும். சித்திரை மாதம் 9ஆம் தேதி (ஏப்ரல் 22ஆம் தேதி) மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த நாள். ஏனெனில் அன்றைய தினம் அட்சய திருதியை ஆகும். எனவே குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம் : கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சம்பள உயர்வு ஏற்படும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க | 12 ஆண்டு...இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பண மழை கொட்டும்

கடகம்: தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். குரு பகவான் வேலை தொழிலில் எண்ணற்ற மாற்றங்களை தரப்போகிறார். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்: இவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித் தரும். இது சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். 

கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். பதவி - கௌரவம் அதிகரிக்கும். மக்கள் உங்களை அதிகமாக மதிப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல காலம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

துலாம்: குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது மீண்டும் கிடைக்கும். 

மீனம்: வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக முடியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த மாதம் குரு பெயர்ச்சியால் உருவாகும் சண்டாலயோகம்..! 4 ராசிகளுக்கு 7 மாதங்களுக்கு ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News