டிசம்பரில் கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Lucky Zodiacs of December: டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள ராசி மாற்றங்களால் அனைத்து கிரகங்களிலும் தாக்கம் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான பலன்களை அள்ளிக்கொடுக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2022, 04:11 PM IST
  • டிசம்பரில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலனைப் பெறுவீர்கள்.
  • வணிகத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும்.
டிசம்பரில் கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? title=

டிசம்பர் 2022 மாத ராசிபலன்: ஜோதிடத்தின் பார்வையில் டிசம்பர் 2022 மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதம் 3 முக்கிய கிரகங்களின் ராசிகள் மாறவுள்ளன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள ராசி மாற்றங்களால் அனைத்து கிரகங்களிலும் தாக்கம் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான பலன்களை அள்ளிக்கொடுக்கும். 

டிசம்பர் முதல் வாரத்தில் அதாவது டிசம்பர் 3, 2022 அன்று புதன் பெயர்ச்சியாகிறது. டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றும். அதன் பிறகு டிசம்பர் 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் நிகழும். புதன், சுக்கிரன் மற்றும் சூரியனின் பெயர்ச்சி ஆண்டின் கடைசி மாதத்தில் நிகழும். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.

டிசம்பரில் புதனும் சுக்கிரமும் இரு முறை மாற்றம் காணும்: 

2022 டிசம்பரில் புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒருமுறை அல்ல இரண்டு முறை ராசியை மாற்றும். டிசம்பர் 3ஆம் தேதிக்குப் பிறகு புதன் கிரகம் மீண்டும் பெயர்ச்சியாகி டிசம்பர் 27 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைகிறது. மறுபுறம், சுக்கிரன் டிசம்பர் 29 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையும். 

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2022 டிசம்பரில் பிரகாசிக்கும்:

மிதுனம்: 

டிசம்பரில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலனைப் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். சொத்துக்களால் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். வீட்டில் சில சுப நிகழ்வுகள் நடக்கும். 

மேலும் படிக்க | குரு வக்ர நிவர்த்தியால் உண்டாகும் ஹம்ச யோகம்; ‘இந்த’ ராசிக்கு ஒளிமயமான எதிர்காலம்! 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பல நன்மைகளைத் தரும். முடங்கி இருக்கும் பணிகள் இப்போது நடக்க ஆரம்பிக்கும். தடைபட்ட பணிகள் தானாக தொடங்கும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் இருக்கும். தொழில் வாழ்க்கையும் சிறப்பாக நடக்கும். சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு வரும். ஆண்டின் இறுதியில், நீங்கள் ஒரு பெரிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். 

மகரம்: 

டிசம்பர் மாதத்தில் நடைபெறும் புதன், சுக்கிரன் மற்றும் சூரியனின் பெயர்ச்சி மகர ராசியினருக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். நீங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் தொடர்புகளும் உறவுகளும் மேம்படும். இதன் மூலம் நீங்கள் பலன் பெறுவீர்கள். 

பண வரவு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வந்தடையாமல் இருந்த பணம் இப்போது வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால், சில முக்கிய வேலைகள் முடிவடையும், அதன் காரணமாக நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு இப்போது கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி: 2023-ல் இந்த ராசிகள் மீது ராகுவின் விசேஷ பார்வை, பணமும் புகழும் பெருகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News