ராகு பெயர்ச்சி: 2023-ல் இந்த ராசிகள் மீது ராகுவின் விசேஷ பார்வை, பணமும் புகழும் பெருகும்

Rahu Transit in Pisces 2023: 2023-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2022, 11:12 AM IST
  • ராகுவின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைத் தரும்.
  • பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ராகு பெயர்ச்சி: 2023-ல் இந்த ராசிகள் மீது ராகுவின் விசேஷ பார்வை, பணமும் புகழும் பெருகும் title=

மீனத்தில் ராகு பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகின்றன. இந்த இரண்டு கோள்களும் எப்பொழுதும் வக்ர நிலையில், அதாவது இயல்பு நிலைக்கு எதிரான நிலையில் நகர்கின்றன. இவை மாயா கிரகங்களாக கருதப்படுகின்றன. 2022-ம் ஆண்டு ராகு, கேது ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றின. அடுத்த ஆண்டான 2023 ஆம் ஆண்டிலும் இவை ராசியை மாற்றவுள்ளன. 

சனிப் பெயர்ச்சியைப் போலவே ராகு சஞ்சாரமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பெயர்ச்சியால், மக்களின் வாழ்வில் பெரிய அளவிலான சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு, ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கவுள்ளார். 2023-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ராகு பெயர்ச்சி 2023 -ல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரம் அதிகப் பண வரவை ஏற்படுத்திக்கொடுக்கும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, ராகுவின் பெயர்ச்சி காலம் உங்கள் நிதி நிலையை தொடர்ந்து பலப்படுத்தும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரும் ஆதாயம் அடைவார்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்திலும், படிப்பிலும், குடும்பத்திலும் அனுகூலமான சூழல் இருக்கும்.

மேலும் படிக்க | 2022 கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்! யாருக்கு எச்சரிக்கை? 

கடகம்:

ராகுவின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைத் தரும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தடைபட்ட வேலைகள் முடிவடையும். இருப்பினும், இந்த நேரத்தில் பொறுமை மற்றும் புரிதலுடன் வேலை செய்யுங்கள், இல்லையெனில் ராகு தீங்கு விளைவிக்கக்கூடும்.

மீனம்: 

ராகு சஞ்சாரத்திற்குப் பிறகு மீனத்தில் நுழைகிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நற்பலன்களை அள்ளித் தரும். மீன ராசிக்காரர்களுக்கு ராகு அதிக செல்வத்தைக் கொடுப்பார். அவர்களது வருமானம் அதிகரிக்கும். அதே போல் எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் பெரிய சாதனைகளை அடைவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். கணவன் / மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலுக் படிக்க | 2022 கார்த்திகை மாத ராசிபலன்: மீனத்துக்கு எச்சரிக்கை! சுப செலவு எந்த ராசியினருக்கு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News